நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது.. உத்தரவில் கையெழுத்திட்டார் புடின்!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான 'புனித ஆண்ட்ரூ தி அப்போஸ்டில்' விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய நாட்டின், உயரிய விருதாக கருதப்படுவது புனித ஆண்ட்ரூ தி அப்போஸ்டில் விருது. இது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

Narendra Modi to be conferred with Russias highest honor

ரஷ்யா மற்றும் இந்தியா நடுவேயான உறவை பிரதமர் நரேந்திர மோடி மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்தியா மற்றும் ரஷ்ய மக்கள் இடையே, நட்புறவு பேணப்படுவதிலும், மோடியின் பங்களிப்பு உள்ளதாக ரஷ்யா தூதரகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே ரஷ்யாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, இந்தியா-ரஷ்யா உறவு மேம்பாடுக்காக தீவிர முயற்சி எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+