"இம்பாசிபிள்": இயற்பியல் விதிக்குப் புறம்பான நவீன ராக்கெட் என்ஜின்.. நாசா கண்டுபிடிப்பு!
நியூயார்க்: அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள், இயற்பியல் விதிகளுக்குப் புறம்பான முறையில் இயங்கும் ஒரு அதி நவீன ராக்கெட் என்ஜினை வடிவமைத்துள்ளனர்.
சூரிய சக்தியின் மூலமாக இயங்கக் கூடிய இந்தப் புதிய வகை ராக்கெட் என்ஜினை செயல்படுத்த நாசா அனுமதியும் அளித்துள்ளது.
இயற்பியல் விதிகளுக்கு எதிராக சூரிய சக்தியின் மூலம் உண்டாக்கப்படும் மைக்ரோவேவ் அலைகளைக் கொண்டு இந்த ராக்கெட் என்ஜின் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்பியல் விதி:
ஒரு பொருளானது உந்து சக்தியால் மட்டுமே, முன்னோக்கி நகர முடியும் என்பது அடிப்படை இயற்பியல் விதியாகும். ஆனால் அதற்கு நேர் மாறாக இந்த புதிய ராக்கெட் என்ஜினின் செயல்பாடு உள்ளது.

இம்பாசிபிள் என்ஜின்:
"இம்பாசிபிள்" என்று இந்த புதிய வகை ராக்கெட் என்ஜின் தொழில்நுட்பத்திற்குப் பெயரிட்டுள்ளது நாசா. அதன் சோதனை ஓட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

புதிய கண்டுபிடிப்பு:
நாசாவின் இந்தப் புதிய கண்டுபிடிப்பு அறிவியல் உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. விண்வெளிப் பயணங்களில் இந்த புதிய கண்டுபிடிப்பு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாத்தியப்பட்ட தொழில்நுட்பம்:
புரப்பல்லன்ட் இல்லாமலேயே திரஸ்ட் மூலம் சக்தியை உருவாக்கி அதைக் கொண்டு என்ஜின் இயங்குவது போல இந்த தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள். இது நிச்சயம் சாத்தியமில்லாத ஒன்றுதான். ஆனால் அதை சாதித்துள்ளது நாசா தொழில்நுட்பம்.

எரிபொருள் தேவை இல்லை:
வழக்கமாக தற்போது வி்ண்வெளிக் கலங்களில் பெருமளவில் எரிபொருள் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால் தற்போதைய கண்டுபிடிப்பில் இவ்வளவு எரிபொருள் தேவையில்லை. கிட்டத்தட்ட எரிபொருளே தேவையில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளனர். அதேசமயம், புதிய கண்டுபிடிப்பை அமல்படுத்த பெரும் பொருட் செலவு ஏற்படுகிறது.

கானே டிரைவ்:
புதிய தொழில்நுட்பம் இப்படித்தான் செயல்படுகிறது. அதாவது கானே டிரைவ் என்று பெயரிடப்பட்டுள்ள என்ஜின்தான் இதன் முக்கிய அம்சமாகும். இதில் மின் காந்த சக்தி மூலம் மைக்ரோவேவ் அலைகள் உருவாக்கப்படுகின்றன.

கன்டெய்னர் இயக்கம்:
இது என்ஜினில் பொருத்தப்பட்டுள்ள ஒரு கன்டெய்னருக்குள் அதிக சக்தியுடன் சுற்றி வந்து விசையை உருவாக்குகிறது. இது அந்த என்ஜினை இயக்க உதவுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications