மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய அமெரிக்க பொறியாளர் ”ஜான் சி ஹூபோல்ட்” உயிரிழப்பு
வாஷிங்டன்: மனிதர்களை நிலவுக்கு அனுப்பியதில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்க பொறியாளர் இன்று காலமானார்.அவருக்கு வயது 95.
நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பியதில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்க பொறியாளர் ஜான் சி ஹூபோல்ட் தனது 95 ஆவது வயதில் இன்று காலமானார்.
இதுகுறித்து அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா வெளியிட்டுள்ள அறிக்கையில், "விண்வெளித் துறையில் ரஷியாவுடன் கடும் போட்டி நிலவி வந்த நெருக்கடியான காலக்கட்டத்தில், நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான அமெரிக்காவின் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஹூபோல்ட் முக்கியப் பங்காற்றினார்.
பூமியிலிருந்தே நேரடியாக மிகப்பெரிய ராக்கெட் மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கு பதிலாக, நிலவில் சுற்றுவட்டப் பாதையிலிருந்து சிறிய ஓடம் மூலம் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதே சிறந்ததாக இருக்கும் என அவர் வாதாடி, அதற்கான ஒப்புதலை அதிபர் ஜான் கென்னடியிடமிருந்து பெற்றார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாஸாவிலிருந்து 1976 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஹூபோல்ட், அதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களில் விண்வெளித்துறை ஆலோசகராக பணியாற்றி வந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications