நண்பனை இழக்கும் பூமி! நிலவுக்கு காத்திருக்கும் ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
வாஷிங்டன்: '2024 YR4' எனும் விண்கல் நிலவை மோத வாய்ப்பு இருப்பதாகவும், இந்த சம்பவத்தால் நாம் நிலவை நிரந்தரமாகக்கூட இழக்கலாம் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். அப்படி நடந்தால் அது பூமியிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
நாசாவின் 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி '2024 YR4' எனும் விண்கல்லை, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இக்கல் பயணிக்கும் பாதைக்கு குறுக்கே பூமி வரும், இதனால் இந்த விண்கல் பூமி மீது மோதும் என்று தொடக்கத்தில் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான சாத்தியங்கள் இல்லை என்று இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் இக்கல் நிலவு மீது மோத வாய்ப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

தொடக்கத்தில் 3.8% மட்டுமே வாய்ப்புகள் இருந்தது. ஆனால் இப்போது இது 4.3%ஆக அதிகரித்திருக்கிறது. இப்போதைக்கு நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, இந்த கல் மோதினாலும், நிலவு அதன் சுற்றுவட்டப்பாதை பாதையிலிருந்து விலகாது என்பதுதான். ஆனால் அதுவுமே கூட 100% உறுதியாக சொல்லிவிட முடியாது.
இது குறித்த விஞ்ஞானிகள் கூறுகையில், "ஜேம்ஸ் வெப் தொலைநோக்கின் 'Near-Infrared Camera' மூலம் நாங்கள் தொடர்ந்து விண்கல்லின் பாதையை ஆய்வு செய்து வந்தோம். இந்த ஆய்வில் புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அதன்படி நிலவை இக்கல் 2032ம் ஆண்டு தாக்கலாம். முதன் முதலில் இக்கல் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கமாக பூமிக்கு 70 லட்சம் கி.மீ நெருக்கத்தில் வரும் விண்கற்கள் ஆபத்தானவையாகும். அந்த வகையில் இந்த விண்கல்லும் ஆபத்தானதுதான்.
நிலவுடன் ஒப்பிடும்போது இக்கல், மிகவும் எடை குறைந்தது. எனவே பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே அச்சப்பட வேண்டியதில்லை" என்று கூறியுள்ளனர். ஆனால் சில தனியார் விண்வெளி ஆய்வாளர்கள், இக்கல் நிலவு மீது மோதும்போது நிலவு பூமியை விட்டு மேலும் விலகி செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி நடந்தால், அதன் விளைவுகளை பூமி எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
நிலவின் ஈர்ப்பு விசையால் கடல் அலைகள் உருவாகின்றன. நிலவு இல்லையெனில், சூரியனின் ஈர்ப்பு மட்டுமே அலைகளை உருவாக்கும், இதனால் அலைகள் மிகவும் பலவீனமாகவும் ஒழுங்கற்றதாகவும் இருக்கும். கடலில் அலை வந்தல் என்ன? வரவிட்டால் என்ன? என்று கேட்கிறீர்களா! கொஞ்சம் பொறுங்கள் அதைவிட பெரிய பாதிப்புகள் எல்லாம் ஏற்படலாம் என ஆய்வாளர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
அதாவது, நிலவு பூமியின் சுழற்சி அச்சை நிலைப்படுத்த உதவுகிறது. இல்லையெனில், பூமியின் அச்சு பெரிய அளவில் பாதிக்கப்படும். இது காலநிலையில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தும். நிலவு இரவில் இயற்கையான வெளிச்சத்தை வழங்குகிறது. இது இல்லையெனில், இரவுகள் மிகவும் இருண்டதாக இருக்கும், இது விலங்குகள் மற்றும் மனிதர்களின் நடவடிக்கைகளை பாதிக்கும். உதாரணத்திற்கு கடற்கரை மணற் பரப்பிலிருந்து வெளிவரும் ஆமை குஞ்சுகள் நிலவின் வெளிச்சத்தை அடையாளம் கண்டுதான் கடலுக்கு போகிறது.
கடல்வாழ் உயிர்களுக்கு இனப்பெருக்கம், வேட்டையாடுதல் உள்ளிட்டவற்றிற்கு நிலவு வெளிச்சம் அவசியம். நிலவு இல்லையெனில் ஆமை போல பல உயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications