செவ்வாயில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கியமான பொருள்.. மனிதர்கள் வாழ முடியுமா? விஞ்ஞானிகள் பதில்!
வாஷிங்டன்: நாசா அனுப்பிய கியூரியாசிட்டி எனும் ரோபோ செவ்வாய் கிரகத்தில் முக்கியமான பொருள் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறது. இதை ஆய்வு செய்வதன் மூலம் அங்கு மனிதர்களால் வாழ முடியுமா? என்பது பற்றி மேலும் அதிகமாக நம்மால் தெரிந்துக்கொள்ள முடியும்.
கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தின் கேல் பள்ளத்தாக்கு பகுதியில் ஆய்வு செய்து வருகிறது. இந்த பகுதியில் ஒரு காலத்தில் நீர் இருந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது இந்த பகுதியிலிருந்து சைடரைட் எனும் கனிமத்தை ரோவர் கண்டுபிடித்திருக்கிறது.

ஈரப்பதத்துடன், வெப்பம் நிறைந்த பகுதியாக உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இந்த பகுதி ஒரு காலத்தில் இருந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரம்தான் இந்த கனிமம். கடந்த 2011ம் ஆண்டு இந்த ரோவரை நாசா அனுப்பியது. இது அடுத்த ஆண்டு, அதாவது 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. இதன் முக்கிய நோக்கம் செவ்வாயின் வானிலை, புவியியல் அமைப்புகளை ஆராய்தல் மற்றும் அந்த கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை சேகரித்தல்தான்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தகவல்களை இந்த ரோவர் சேகரித்து பூமிக்கு அனுப்பியிருக்கிறது. இந்நிலையில், தற்போது கொடுத்துள்ள தகவல் அல்டிமேட்டாக இருக்கிறது. மேலே குறிப்பிட்டதை போல இந்த ரோவர் சைடரைட் எனும் கனிமத்தை கண்டுபிடித்திருக்கிறது. இது கண்டுபிடிக்கப்பட்ட இடம், 154 கி.மீ பரப்பளவு உள்ள ஒரு பள்ளத்தாக்காகும். இங்கு ஒரு காலத்தில் நீர் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாகத்தான் இந்த கனிமம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
சைடரைட் என்பது இரும்பு கார்பனேட் கனிமமாகும். இது அடர்த்தியான கார்பன் டயாக்சைடு வாயு நிறைந்த சூழலில் உருவாகும். அப்படியெனில் செவ்வாய் கிரகத்தில் இப்போது பூமியில் இருப்பதை போல நீர் திரவ நிலையிலும், அதை பாதுகாத்து வைக்கும் அளவுக்கு வெப்பமும் இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இதை ஆய்வு செய்வதன் மூலம் செவ்வாயில் தற்போது பசுமை நிலை எப்படி இருக்கிறது? பூமியின் நிலைத்த கார்பன் சுழற்சிக்கும், செவ்வாயின் சமநிலையற்ற சூழ்நிலைக்கும் இடையேயான வேறுபாட்டையும் எப்படி புரிந்து கொள்வது? செவ்வாய் ஏன் இப்படி மாறியது என்பது பற்றி தெரிந்துக்கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதேபோல எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் தங்குவதற்கான வாய்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையும் இந்த ஆய்வின் மூலம் தெரிந்துக்கொள்ள முடியும் என்றும் கூறுகின்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications