For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கதேசத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 120 பேர் நீரில் மூழ்கி பலி?

By Siva
Google Oneindia Tamil News

முன்ஷிகஞ்ச்: வங்கதேசத்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த சுமார் 120 பேரின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை.

வங்கதேசத்தில் உள்ள முன்ஷிகஞ்ச் மாவட்டம் மதாரிபூரில் இருந்து 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பத்மா ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடந்த திங்கட்கிழமை கவிழ்ந்த படகில் இருந்து 100 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் 2 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில் பத்மா ஆற்றில் மீட்புக்குழுவினர் தேடல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

120 பேர்

120 பேர்

செவ்வாய்க்கிழமை முழுவதும் தேடியும் எந்த சடலமோ, நபர்களோ கிடைக்கவில்லை. படகில் பயணம் செய்தவர்களில் 120 பேரின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. அதனால் அவர்கள் நீரில் மூழ்கி பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

படகு

படகு

மீட்புக்குழுவினர் பத்மா ஆற்றில் இரண்டு நாட்களாக தேடியும் மூழ்கிய படகை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

ஓவர்லோடு

ஓவர்லோடு

ஆற்றில் மூழ்கியது சிறிய ரக படகு. அதில் 85 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். அப்படி இருக்கையில் 200க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததால் தான் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்துவிட்டது.

வழக்கமானது

வழக்கமானது

வங்கதேசத்தில் படகுகளில் அளவுக்கு அதிகாமானோரை ஏற்றுவதால் அங்கு படகு விபத்து என்பவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. மேலும் படகையும் சரியாக பராமரிப்பதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Nearly 120 are feared dead after the ferry in which they were travelling sank in Padma river in Bangladesh on monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X