பாகிஸ்தானை காலியாக்கும் இந்தியா.. சத்தமின்றி நடக்கும் யுத்தம்.. இதை கவனிச்சீங்களா? மாஸ் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நம் நாடு நிறுத்தி வைத்துள்ளது. இதன்மூலம் அந்த நாட்டின் 22 கோடி மக்கள் பாதிக்கப்பட உள்ள நிலையில் பாகிஸ்தானின் 25 சதவீத உள்நாட்ட உற்பத்தி சரிவடையும் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். இதற்கு ‛ஆபரேஷன் சிந்தூர்' என்பதன் மூலம் நம் நாடு பதிலடி கொடுத்தது. 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இதுதவிர பாகிஸ்தான் விமான தளம், ராணுவ தளம் என்ற 12 இடங்களும் ஏவுகணை தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டது.

pakistan india indus water treaty

இந்த பாகிஸ்தான் நம்மிடம் பணிந்து சண்டை நிறுத்தம் செய்ய கோரியது. நம் நாடும் ஒப்புக்கொண்டதை தொடர்ந்த மோதல் என்பது முடிவுக்கு வந்தது. முன்னதாக கடந்த மாதமே பாகிஸ்தானுக்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. அதன்படி பாகிஸ்தானியர்களை நம் நாட்டில் இருந்து வெளியேற்றியது. சார்க் விசா ரத்து செய்யப்பட்டது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக நம் நாடு அறிவித்தது. இதன்மூலம் பாகிஸ்தானின் அடிமடியிலேயே கை வைத்தது நம் நாடு. ஏனென்றால் பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் என்பது மிகவும் முக்கியமாகும். அந்த நாட்டின் மக்கள்தொகை என்பது 25 கோடியே 50 லட்சமாக உள்ளது. இதில் 22 கோடி மக்கள் சிந்து நதி நீரால் தான் பயனடைந்து வந்தனர். இதனால் சிந்து நதிநீரை நிறுத்தி நம் நாடு பாகிஸ்தானுக்கு ‛செக்' வைத்தது.

இப்போது மோதல் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவில் இருந்து நம் நாடு மாறவில்லை. பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவை நிறுத்தினால் மட்டுமே சிந்து நதி நீர் ஒப்பந்தம் பற்றி மறுபரிசீலனை செய்யலாம் என்று நம் நாடு அறிவித்துவிட்டது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது. ஏனென்றால் சிந்து நதி நீர் கிடைக்காவிட்டால் பாகிஸ்தானில் மக்கள் புரட்சி கூட வெடிக்கலாம்.

ஏற்கனவே பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி உள்ளது. தற்போது நம் நாடு தண்ணீரையும் நிறுத்தினால் அது மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கலாம் என்பதால் பாகிஸ்தான் அரசு பயப்படுகிறது. இதனால் தான் சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு திறந்து விட வேண்டும் என்று பாகிஸ்தான் கெஞ்சி வருகிறது. அவ்வப்போது பாகிஸ்தானை சேர்ந்த அரசியல்வாதிகள், ராணுவ அதிகாரிகள் சிந்து நதி நீரை திறந்து விட வேண்டும் என்று மிரட்டல் தொனியில் கூறினால் நம் நாடு கண்டுக்கொள்வதாக இல்லை.

இதனால் வேறு வழியின்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் நம் நாட்டிடம் கெஞ்ச தொடங்கி உள்ளார். பயங்கரவாதம், சிந்து நதி நீர் குறித்து இந்தியாவுடன் பேச தயார் என்று மண்டியிட்டுள்ளார். இதற்கு நம் நாடு இன்னும் உடன்படவில்லை. நேற்று மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் அளித்த பேட்டியில், ‛‛சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை பொறுத்தவரை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடன் செயல்பட வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிட வேண்டும். அதனை கைவிடும்வரை சிந்து நதிநீர் இடைநிறுத்தம் அமலில் இருக்கும்'' என்று உறுதியாக தெரிவித்தார்.

இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது என்பது மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமின்றி அந்த நாட்டின் பொருளாதாரத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

பாகிஸ்தானில் லாகூர், முல்தான், கராச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு ஓடும் ஆறுகளுக்கு சிந்து நதிநீரில் இருந்து தான் தண்ணீர் செல்கிறது. இதனால் அந்த நகரங்களும் பாதிக்கப்பட உள்ளது. அதேபோல் தர்பேலா, மங்களா நீர்மின் நிலையங்களும் உற்பத்தியை நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் 16 மில்லியன்(ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) ஹேக்டர் நிலப்பரப்பில் சிந்து நதிநீரை வைத்து தான் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். எளிமையாக கூற வேண்டும் என்றால் பாகிஸ்தானின் 80 சதவீத விவசாயம் சிந்து நதிநீரை நம்பித்தான் உள்ளது. இதன்மூலமாக தான் கோதுமை, அரிசி, கரும்பு மற்றும் பருத்தியை பாகிஸ்தான் விளைவித்தது. பாகிஸ்தானில் 22 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த சிந்து நதிநீரை நம்பித்தான் உள்ளனர்.

விவசாயம், குடிநீருக்கு இதனை தான் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் 22 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் மக்கள்தொகை 25 கோடியே 50 லட்சம் என்ற நிலையில் கிட்டத்தட்ட மொத்த நாட்டு மக்களும் பாதிக்கப்பட உள்ளனர். இந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம் அந்த நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு 25 சதவீதம் வரை பங்களிப்பு செய்தது. இது நிறுத்தப்பட்டுள்ளதால் உள்நாட்டு உற்பத்தி என்பது சரியும். இதன்மூலம் மக்கள் வேலையிழப்பை எதிர்கொண்டு பணக்கஷ்டத்தை சந்திப்பார்கள். உள்நாட்டு உற்பத்தி குறையும்போது அந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும். இதன்மூலம் ஆயுதங்கள் ஏதுமின்றி பாகிஸ்தானுக்கு பெரும் அடியை இந்தியா கொடுத்துள்ளது.

முன்னதாக கடந்த 1960ம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டன. உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் நடந்த இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரை இருநாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு கிழக்கு பகுதி ஆறுகள் (ரவி, பியாஸ், சட்லெஜ் - 30% நீர்), பாகிஸ்தானுக்கு மேற்கு பகுதி ஆறுகள் (சிந்து, ஜீலம், செனாப் - 70% நீர்) ஒதுக்கப்பட்டன. இதன்மூலம் நம் நாட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் முறையாக சென்றது. பாகிஸ்தான் மக்கள் பெரிதும் பயனடைந்தனர். விவசாயம், குடிநீருக்கு இந்த நதிநீரை பயன்படுத்தி வந்தனர். ஆனால் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக நம் நாடு அறிவித்தது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+