நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 126 பேர் பலி! சரிந்து விழுந்த கட்டடங்களால் அச்சம்
காத்மாண்டு: நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து 126 பேர் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.
நேபாளத்தில் லாபுசே நகரில் இருந்து 93 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் இன்று காலை 6.35 மணிக்கு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த கட்டடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 124 பேர் பலியாகிவிட்டனர்.

ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கம் வந்த இடத்தை சுற்றியுள்ள கட்டடங்கள் சரிந்து விழுந்தன. இதனால் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது.
இதுகுறித்து சீன நாட்டு செய்தி நிறுவனம் கூறியிருப்பதாவது: டிங்கி மாகாணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சக்தி வாய்ந்த நில அதிர்வுகள் உணரப்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட மையத்தை சுற்றியுள்ள இடங்களில் கட்டடங்கள் சரிந்து விழுந்ததாக தெரிவித்துள்ளது.
காட்மாண்டுவில் உள்ள மக்கள் வீட்டை விட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதுகுறித்து ஒருவர் கூறுகையில், நான் தூங்கிக் கொண்டிருந்தேன், அப்போது எனது கட்டில் குலுங்கியது. என் குழந்தைதான் கட்டிலை நகர்ந்துகிறதோ என நினைத்தேன். அதனால் நான் என்னவென பார்க்கவில்லை.
ஆனால் ஜன்னல்கள் ஆடியதை வைத்துதான் நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்தேன். உடனே என் குழந்தையையும் குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு திறந்தவெளி மைதானத்திற்கு வந்துவிட்டேன் என்றார்.
நிலநடுக்கம் ஏற்பட்ட மையம் இமயமலைக்கு அருகே இருப்பதால் உயரமான மலைகள் குன்றுகள் சரிய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. சீனாவில் 29 முறை நில அதிர்வுகள் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்டதாக கூறுகிறது. இவை எல்லாம் இன்று ஏற்பட்ட நில அதிர்வைவிட குறைவானது என சீன ஊடகங்கள் கூறுகின்றன.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் வட இந்தியாவிலும் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் வங்கதேசம், இந்தியா, பூடான், சீனாவிலும் எதிரொலித்ததாக சொல்லப்படுகிறது. மணிப்பூரில், பீகார், டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 8000- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications