வெறும் 30 நொடி.. விளையாட்டு பொம்மை போல அடித்து செல்லப்பட்ட பாலம்! நேபாள வெள்ளத்தின் கொடூரம்! வீடியோ

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு: நேபாள நாட்டில் நேற்றைய தினம் யாருமே எதிர்பாராத வகையில் ஒரு பேரழிவு தாக்கியது. கண்ணை மூடி திறப்பதற்குள் அங்கு தாக்கிய மிக பெரிய வெள்ளம் நேபாளத்தைப் புரட்டி போட்டது. இதற்கிடையே இந்த எந்தளவுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை காட்டும் வகையிலான பருந்து பார்வை காட்சிகள் வெளியாகியுள்ளன.

இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளத்தில் திடீர் திடீரென யாருமே எதிர்பாராத பேரழிவு ஏற்படும். அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் நேற்று ஏறப்பட்டிருந்தது. கண்ணை மூடி திறப்பதற்குள் அங்கு ஏற்பட்ட வெள்ளத்தால் ஒட்டுமொத்த நேபாளமும் பேரழிவை சந்தித்தது.

Nepal nepal flood Nepal flood reason

நேபாள பேரழிவு

இதற்கிடையே நேபாளில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தின் பாதிப்புகளை காட்டும் பருந்து பார்வை காட்சிகள் வெளியாகியுள்ளன. மீட்பு பணியின்போது பதிவு செய்யப்பட்ட இந்த காட்சிகளில், வெள்ளத்தின் வேகம் எப்படி அங்கிருந்த சாலைகள், பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் அடித்து சென்றது. அங்குள்ள ஒட்டுமொத்த பகுதிகளும் எப்படி சேறும் சகதியுமாக மாறியிருக்கிறது என்பதை நமக்கு காட்டுகிறது.

இமயமலை பகுதியில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தால்.. நேபாள திபெத் எல்லையில் இருந்து மிக பெரிய அளவு தண்ணீர், வண்டல் மண் மற்றும் பாறைகள் பாய்ந்துள்ளது. இதனால் நேபாளத்தில் மட்டும் குறைந்தது 162 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடக்கும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த பாதிப்பு நேபாளம் மட்டுமின்றி சீனாவிலும் எதிரொலித்துள்ளது. அங்கு 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 265 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான சேதம்

வெள்ளத்தால் ராசுவா மற்றும் தாதிங் மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பின்னர் வெள்ள நீர் நுவாகோட், சித்வான், கோர்க்கா, தனாஹுன் மற்றும் நவல்பராசி ஈஸ்ட் பகுதிகளுக்கும் சென்றுள்ளது. வெள்ளத்தின் வேகத்தில் வீடுகள், வாகனங்கள் மற்றும் பாலங்கள் என அனைத்துமே அடித்து செல்லப்பட்டுள்ளன. 19 பாலங்கள் இந்த வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளன. மேலும், நுவாகோட்டில் உள்ள பெத்ராவதியையும் ராசுவாகதி எல்லை பகுதியையும் இணைக்கும் 42 கிமீ சாலை சேதமடைந்துள்ளது.

இந்த வெள்ளத்தின் கோரத்தை காட்டும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் வெள்ள நீர் பாலத்தை சூழ்ந்து, சுமார் 30 விநாடிகளில் அந்த ஒட்டுமொத்த பாலத்தை அப்படியே அடித்து செல்வது பதிவாகியுள்ளது. மற்ற காட்சிகளில் கட்டிடங்களை வெள்ள நீர் மூழ்கடிப்பதும், வாகனங்கள் ஏதோ விளையாட்டு பொருட்களை போல வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதும் தெரிகிறது.

மின் திட்டங்கள்

இந்த வெள்ளம் காரணமாக அங்குள்ள புனல் மின்நிலையங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ராசுவா மற்றும் நுவாகோட் பகுதிகளில் செயல்பாட்டில் இருந்த 8 மின் திட்டங்கள் சேதமடைந்துள்ளன. இது தவிர கட்டுமானத்தில் இருந்த 5 மின் திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இப்படி வெள்ளத்தால் அங்குள்ள சாலைகள், பாலங்கள் மட்டுமின்றி, அப்பகுதியின் முக்கிய உள்கட்டமைப்புகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது..

வெள்ளத்துக்கு காரணம் என்ன?

நேபாள திபெத் எல்லையில் உள்ள ல்ஹெண்டே ஆற்று பகுதியில் தான் இந்த பேரழிவு தொடங்கியிருக்கலாம். அங்கு ஏற்பட்ட பனி பாறை சரிவு இந்த பேரழிவை ஏற்படுத்தியிருக்கலாம். என கூறப்படுகிறது. இந்த பனிப்பாறையால் ஏற்பட்ட வெள்ளம் போட்டே கோசி ஆற்றுக்குள் பாய்ந்ததாகவும், பின்னர் ராசுவாவின் திமுரே பகுதியில் அது திரிசூலி ஆற்றுக்குள் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரழிவுக்கு நிலநடுக்கம் காரணமாக இருக்கலாம் என சொல்லப்பட்டாலும் அதற்கு உறுதியான தகவல்கள் இல்லை.

பேரழிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் சாலைகள் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மோசமாக பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் ஹெலிகாப்டர்களால் தரையிறங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேபாள ராணுவம் மீட்புப் பணிகளுக்காக 12 ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகிறது. இதுவரை சுமார் 100 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+