தோண்டத் தோண்ட வரும் பிணங்கள்: நேபாளத்தில் பலி எண்ணிக்கை 5000ஐ தாண்டியது
காத்மாண்டு: நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மீட்பு குழுவினர் இதுவரை 5 ஆயிரத்து 57 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் சுமார் 10 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொடும் என்று அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். போதிய உபகரணங்கள் மற்றும் நிபுணர்கள் இல்லாததால் கிராமங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் நேபாளத்தில் 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் நூற்றுக்கணக்கானோர் இடிபாடிகளில் இன்னும் சிக்கியுள்ளனர். தலைநகர் காத்மாண்டு தான் நிலைகுலைந்து போயுள்ளது.
காத்மாண்டுவில் திரும்பும் பக்கம் எல்லாம் பிணங்களாக உள்ளதுடன் மக்களின் அழுகுரல் எந்நேரமும் கேட்கிறது. இந்நிலையில் ஏராளமானோர் காத்மாண்டுவில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
நேபாளத்தில் 14 லட்சம் பேர் போதிய உணவு, தண்ணீர் இன்றி தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications