இடிபாடுகளில் இருந்து இனி யாரையும் உயிருடன் மீட்க வாய்ப்பு இல்லை: நேபாள அரசு அறிவிப்பு
காத்மண்டு: நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் இருந்து இனி யாரையும் உயிருடன் மீட்க வாய்ப்பு இல்லை என்று நேபாள அரசு அறிவித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த 25-ந்தேதி ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் அந்நாட்டையே புரட்டிப்போட்டது. கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத பேரழிவை சந்தித்துள்ள நேபாளம், அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறது.

நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் எங்கு பார்த்தாலும் கட்டிட இடிபாடுகளும், பொதுமக்களின் மரண ஓலங்களுமாகவே காணப்படுகின்றன. இந்த பேரிடரில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,600 ஆக அதிகரித்துள்ளது என்று நேபாள உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லக்ஷ்மி பிரசாத் தாகால் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை உயிருடன் மீட்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இனி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் 20 நாடுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி யாரேனும் உயிருடன் உள்ளனரா என்று கண்டறிய மோப்ப நாய்கள் உதவியுடன் அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications