நிவாரணம் இல்லை: காத்மாண்டுவில் கலவர தடுப்பு போலீசாருடன் மோதிய மக்கள்
காத்மாண்டு: காத்மாண்டுவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் திடீர் என்று வன்முறையில் ஈடுபட்டதால் அவர்களுக்கும் கலவர தடுப்பு போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தலைநகர் காத்மாண்டு அடையாளம் தெரியாத அளவுக்கு நிலைகுலைந்து போயுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி 6வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இடிபாடுகளில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் பிணங்களாக மீட்கப்படுகின்றனர். இந்நிலையில் மீட்பு பணி ஆமை வேகத்தில் நடப்பதாகவும், நிவாரணப் பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறி மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

உணவு
நிவாரணப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் உணவு, குடிக்க நீரின்றி பல இடங்களில் தவித்து வருகிறார்கள். வெட்டவெளியில் தங்கியிருக்கும் மக்கள் கடுங்குளிரை தாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

காத்மாண்டு
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ஏற்கனவே நூற்றுக்கணக்கானோர் வெளியேறிவிட்டனர். இந்நிலையில் புதன்கிழமை ஏராளமானோர் தலைநகரை விட்டு வெளியேற பேருந்து நிலையங்களுக்கு சென்றனர்.

போராட்டம்
பேருந்துகளில் ஏற நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தும் பேருந்து கிடைக்காததால் மக்கள் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் அந்த வழியாக வந்த வாகனங்களை தாக்கி சேதப்படுத்தினர்.

போலீசார்
போராட்டக்காரர்களை அடக்க கலவர தடுப்பு போலீசார் அங்கு வந்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களில் சிலர் அந்த வழியாக வந்த டிரக்கை வழிமறித்து அதில் இருந்த தண்ணீர் பாட்டில்களை எடுத்து மக்களுக்கு அளித்தனர்.

ரத்ததான முகாம்
நேபாளத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உதவ இந்தியாவின் பல்வேறு நகரங்களில் புதன்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் போலீசார், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications