16,000 பேரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பும் பிரபல நிறுவனம்.. கதறும் ஊழியர்கள்.. பின்னணி
சென்னை: பிரபல நிறுவனமாக செயல்பட்டு வரும் ‛நெஸ்லே'வில் அடுத்த 2 ஆண்டுகளில் 6 சதவீதம் பேரை அதாவது 16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ‛நெஸ்லே' நிறுவனத்தின் இந்த திடீர் முடிவு குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
நெஸ்லே (Nestle).. உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் சார்பில் சாக்லேட்டுகள், பிஸ்கட்டுகள், தண்ணீர், குளிர்பானங்கள் உள்பட பல்வேறு உணவு பொருட்களை விற்பனை செய்கிறது.

இதுதவிர குழந்தைகள், நாய்களுக்குகான ஸ்பெஷல் உணவு பொருட்கள், புரோட்டீன் சார்ந்த உணவு பொருட்களை வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்து வருகிறது.
இந்த ‛நெஸ்லே' நிறுவனம் ஸ்விட்சர்லாந்தின் வெவே நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஒவ்வொரு நாடுகளிலும் தனது தயாரிப்புகளை வெவ்வேறு பெயரில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் தான் ‛நெஸ்லே' நிறுவனம் அதிரடியாக 6 சதவீதம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதாவது 16 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய ‛நெஸ்லே' முடிவு செய்துள்ளது. இதில் 4 ஆயிரம் பேர் தயாரிப்பு மற்றும் சப்ளை செயின் பிரிவில் பணியாற்றுவர்கள் என்றும், 12 ஆயிரம் பேர் ஒயிட் காலர் பிரிவில் பணியாற்றுபவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கை அடுத்த 2 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
நிறுவனத்தின் செயல் திறனை அதிகரிப்பது, வருமான இழப்பை சரிசெய்வது உள்ளிட்டவற்றை இலக்காக கொண்டிருப்பதால் இந்த பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக நெஸ்லே நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நிறுவனத்தில் ஆட்டோமேஷன் வசதிகள் அதிகரிக்கப்பட உள்ளது. இதுபற்றி நெஸ்லே செய்தி தொடர்பாளர் ஃபார்ச்சூன் பத்திரிகையிடம் கூறுகையில், ‛‛எங்களின் இந்த முயற்சி பணி முறையை மாற்றும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது. நிறுவனத்தின் அமைப்பு, செயல்முறைகளை நெறிமுறைப்படுத்தி ஆட்டோமேஷன், டிஜிட்டல் மயமாக்குவதில் கவனம் செலுத்த உள்ளோம்'' என்று கூறியுள்ளார்.
இதனால் நெஸ்லே நிறுவன ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பணி நீக்க நடவடிக்கையில் வேலையை இழக்க வேண்டுமோ? என்ற அச்த்தில் ஊழியர்கள் உள்ளனர். மேலும் இந்த பணி நீக்க நடவடிக்கைக்கு இன்னொரு காரணமும் இருப்பதாக கூறப்படுகிறது. அது என்னவென்றால் நிறுவனத்தின் வருமானம் தான்.
அதாவது நெஸ்லேவின் வருமானம் சரிவை எதிர்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் வந்த வருமானத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு வருமானம் 1.9 சதவீதம் வரை குறைந்து 83.8 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. இந்த வருமான இழப்பும் பணி நீக்க நடவடிக்கைக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications