தைவான் விமான விபத்தில் காயமடைந்து நேதாஜி உயிரிழந்தார்... இங்கிலாந்து இணையதளம் தகவல்
லண்டன்: தைவான் விமான விபத்தில் ஏற்பட்ட காயத்தினாலேயே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததாக இங்கிலாந்து இணையதளம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனிடமிருந்து இந்தியாவிற்கு விடுதலை வேண்டி காந்தியடிகள் அகிம்சை வழியில் போராடினார். அதே நேரம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் பிரிட்டன் ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கி போரிட்டது.
இந்நிலையில், தைவானில் கடந்த 1945ன் ஆண்டு நடந்த விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்தார் என்றும், இல்லை அதற்குப் பின்னரும் அவர் உயிருடன் வாழ்ந்தார் என்றும் இருவேறு தகவல்கள் கூறப்படுகின்றன. தொடர்ந்து நேதாஜியின் மரணம் குறித்து மர்மம் நீடித்து வருகிறது. இதுபற்றிய ரகசிய ஆவணங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப் படவில்லை.

போஸ் பைல்ஸ்...
இந்த சூழ்நிலையில், நேதாஜியின் விமான விபத்தின் போது நடந்தவைகள் குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த இணையதளமான www.bosefiles.info தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த இணையதளத்தை சுயசார்பு பத்திரிகையாளரும், நேதாஜியின் உறவினருமான ஆஷிஸ் ரே நடத்தி வருகிறார்.

விமான விபத்து...
கடந்த ஜனவரி 4-ம் தேதி நேதாஜியின் இந்த விமான பயணத்திற்கு முந்தைய நாள், அதாவது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி நடந்த நிகழ்வுகள் குறித்த ஆவணங்களை இந்த இணையதளம் வெளியிட்டது.

சாட்சிகள்...
அதனை தொடர்ந்து, தைவானில் விபத்துக்குள்ளான விமானத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததை நேரில் கண்ட சாட்சியங்களை கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியானது.

நேதாஜியுடன்...
அதில், "1945 ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி காலை ஜப்பான் நாட்டு விமான படையின் வெடிகுண்டு வீசுகிற வீரர் வியட்நாமின் டோரனேவில் இருந்து விமானத்தை எடுத்துள்ளார். அந்த விமானத்தில் நேதாஜியுடன் 12 அல்லது 13 பேர் கொண்ட குழுவினர் இருந்துள்ளனர். அதில், ஜப்பான் ராணுவத்தை சேர்ந்த லெப்டினன் ஜெனரல் சுனமாசா ஷிடை உடனிருந்தார். ஹிட்டோ-தைபை-டைரென்-டோக்கியோ பாதை வழியாக அந்த விமானம் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேதாஜியின் மரணம்...
அதனை தொடர்ந்து விமான விபத்தன்று நடந்த சம்பவங்களை ஆவணங்களாக அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில், விமான விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகத் தான் நேதாஜி உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுதி...
மேலும், நேதாஜியின் நெருங்கிய கூட்டாளி ஒருவர், 2 ஜப்பான் மருத்துவர்கள், மொழி பெயர்ப்பாளர், ஒரு தைவான் செவிலியர் ஆகிய 5 சாட்சியங்கள் இந்த தகவலை உறுதி செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications