எங்களை பாதுகாத்துக்கொள்ள தெரியும்! நட்பு நாடுகளின் அட்வைஸை ஏற்காத இஸ்ரேல்! மத்திய கிழக்கில் பதற்றம்
டெல் அவிவ்: இஸ்ரேல் மீது ஈரான் சமீபத்தில் நடத்திய தாக்குதல் பெரும் அச்சத்தை கிளப்பியிருந்தது. ஈரானின் செயலுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம், அமைதி காக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அதன் நட்பு நாடுகள் வலியுறுத்தியிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் தற்காப்புக்காக இஸ்ரேல் சொந்தமாக முடிவை எடுக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ அதிகாரிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். இதுதான் ஈரானின் தாக்குதலுக்கு காரணம். இந்த தாக்குதல் குறித்து ஏற்கெனவே அமெரிக்கா எச்சரித்திருந்தது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் கூறியிருந்தது. இருப்பினும் இதனை மீறி ஈரான் ஏப்ரல் 14ம் தேதி தாக்குதலை தொடுத்திருக்கிறது.

அன்று இரவு மட்டும் சுமார் 200க்கும் அதிகமான ஏவுகணைகளும், ட்ரோனும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இதில் 99%-ஐ இஸ்ரேல் அழித்துவிட்டது. ஒரு சில ஏவுகணைகள் மட்டும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தளம் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இஸ்ரேல் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பியிருக்கிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடனடி பதில் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கவில்லை.
ஆனால், நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதலை தொடுக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவும், நேற்று அதிகாலையும் சுமார் 150 ராக்கெட்களை வீசி தாக்குதலை தொடங்கியுள்ளது. இதில் 2 கமாண்டர்கள் உட்பட மூன்று ஹில்புல்லா போராளிகள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.
இந்த தாக்குதல் சம்பவம் மத்திய கிழக்கில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விடுத்துள்ள அறிக்கை பெரும் கவனம் பெற்றிருக்கிறது. அதாவது, "ஈரான் விவகாரத்தில் தற்காப்புக்காக இஸ்ரேல் சொந்தமாக முடிவை எடுக்கும். நட்பு நாடுகளின் கருத்துக்கள் முரணாக இருந்தாலும், இஸ்ரேல் சொந்தமாக முடிவெடுக்கும்" என்று கூறியுள்ளார். அதாவது, ஜெர்மன், பிரிட்டன், அமெரிக்கா போன்ற இஸ்ரேலின் நட்பு நாடுகள், ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க கூடாது, என்று இஸ்ரேலை வலியுறுத்தியிருந்தன.
ஆனால், நெதன்யாகு இந்த அறிவுறுத்தலை ஏற்க தயாராக இல்லை என்பது, தற்போது அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications