அமெரிக்கா செய்ததைதான்.. நாங்களும் செய்தோம்! தோஹா தாக்குதலை நியாயப்படுத்தும் நெதன்யாகு
டெல் அவிவ்: அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா என்ன செய்ததோ அதையேத்தான் நாங்களும் செய்தோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருக்கிறார்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸுக்கும் இடையில் போர் நீடித்து வருகிறது. போரில் 64,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எனவே ஐநா உட்பட பலரும் போர் நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அவ்வளவு ஏன், இஸ்ரேலின் தோஸ்த்தாக இருக்கும், அமெரிக்கா கூட போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தியது. எனவே இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஹமாஸ் தலைவர்கள் ஈடுபட்டிருந்தனர். பேச்சுவார்த்தை கத்தார் நாட்டின் தலைமையில், அந்நாட்டு தலைநகரான தோஹாவில் நடைபெற்றது.
நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டிருந்தபோது திடீரென இஸ்ரேல் போர் விமானங்கள் பேச்சுவார்த்தை நடந்த அலுவலகத்தின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தின. இதில் கத்தார் அதிகாரி ஒருவர் உட்பட 5 பேர் வரை கொல்லப்பட்டனர். ஆனால் நல்வாய்ப்பாக ஹமாஸ் தலைவர்கள் யாரும் உயிரிழக்ககவில்லை.
இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் அரசியல் தலைவர்கள் மீது எப்படி தாக்குதல் நடத்த முடியும்? இது சர்வதேச போர் விதிமீறல் என கத்தார் தொடங்கி பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. அமெரிக்காவும் லைட்டாக கண்டனம் தெரிவித்து பேக் அடித்துக்கொண்டது.
இந்நிலையில் இந்த கண்டனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இஸ்ரேல் பிரதமர், தாக்குதல் குறித்து விளக்கமளித்துள்ளார். "தீவிரவாதிகளுக்கு கத்தார் உள்ளிட்ட நாடுகள் அடைக்கலம் கொடுக்க கூடாது. அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும். அல்லது நீதியின் முன் நிறுத்த வேண்டும். இல்லையெனில் நாங்கள் அதை செய்வோம். கடந்த 2011ம் ஆண்டு செப்.11 அன்று அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு (9/11) அமெரிக்கா எப்படி பதில் வினை ஆற்றியதோ அதையேத்தான் நாங்களும் செய்தோம்.
இஸ்ரேல் மீது 2023ம் ஆண்டு அக்.7ம் தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இது 9/11 தாக்குதலுக்கு ஈடானது. அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா தீவிரவாதிகளைத் தேடிச் சென்று. குறிப்பாக பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை கொன்றது. அமெரிக்கா இதை செய்தபோது உலக நாடுகள் அமெரிக்காவை பாராட்டின. அமெரிக்கா செய்ததைதான் இப்போது மிகச்சரியாக நாங்கள் செய்திருக்கிறோம். ஆனால் எங்கள் மீது கண்டனங்கள் எழுகின்றன. எங்களையும் உல நாடுகள் பாராட்ட வேண்டும்" என்ற கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஆனால் இந்த தாக்குதல் கோழைத்தனமானது என இஸ்ரேல் கண்டித்திருந்தது. மேலும், "பேச்சுவார்த்தைகள் எப்போதும் அதிகாரப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும், சர்வதேச ஆதரவுடனும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பிரதிநிதிகள் முன்னிலையிலும்தான் நடந்தன. ஹமாஸ் பிரதிநிதிகளை கத்தார் ரகசியமாக அடைக்கலம் கொடுத்தது என்ற நெதன்யாகுவின் குற்றச்சாட்டு, உலகம் முழுவதும் கண்டிக்கப்பட்ட ஒரு குற்றத்தை நியாயப்படுத்துவதற்கான முயற்சியாகும்" என்று விமர்சித்திருந்தது.
மற்ற அரபு நாடுகளும் இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்திருந்தன. கத்தாரின் இறையான்மை மீது நடத்தப்பட்ட தாக்குதலாக அரபு நாடுகள் இதை பார்க்கின்றன. பொதுவாக அரபு நாடுகள் அமெரிக்காவுக்கு சப்போர்ட்தான். எனவே அரபு நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் இருக்கும். அமெரிக்க ராணுவ தளம் அமைந்தள்ள நாட்டை மூன்றாம் தர நாடுகள் தாக்குவதை விரும்பாது. ஆனால் இதையெல்லாம் மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. எனவே அமெரிக்கா மீதான நம்பிக்கையை அரபு நாடுகள் இழந்திருக்கின்றன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications