ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டாலும்.. போர் இன்னும் முடியவில்லை! இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டாலும் போர் இன்னும் முடியவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். ஏற்கெனவே போரில் 42,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு அமைதியை விரும்பும் உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ராஃபாவில் நடந்த சண்டையில் ஹமாஸ் தலைவர் யாஹா சின்வாா் உயிரிழந்தார். கட்டிடம் ஒன்றில் பதுங்கியிருந்த ஹமாஸ் படையை சேர்ந்த மூவர், இஸ்ரேல் ராணுவத்தினர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இஸ்ரேல் குண்டுவீசி தாக்கியது. இதில், கட்டிடம் சுக்குநூறாக உடைந்து சிதறியது. இதில் உயிரிழந்தவர்களை இஸ்ரேல் ராணுவம் அடையாளம் கண்டபோது, மூன்று சடலங்களில் ஒன்று ஹமாஸ் தலைவர் என்பதை கண்டுபிடித்தது.

israel netanyahu

இது குறித்து அறிவிப்பு வெளியாகினாலும், உயிரிழந்தது ஹமாஸ் தலைவர் யாஹா சின்வாா்தான் என்பதை உறுதி செய்ய மரபணு சோதனையை மேற்கொண்டது. இதில் யாஹா சின்வாா் என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் அவரது இறப்பை இஸ்ரேல் உறுதி செய்தது.

ஹமாஸை அழிப்பதே இஸ்ரேலின் நோக்கம் என்று அதன் பிரதமர் நெதன்யாகு கூறியிருந்தார். இந்த போரில் 42,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், யாஹா சின்வாா் இறப்புடன் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸும் இதையே கூறியிருந்தார். ஆனால் இன்று அதிகாலை செய்தியாளர்களை சந்தித்த நெதன்யாகு போர் முடிவுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.

அதாவது, "நேற்று ராஃபாவில் நடந்த தாக்குதலில், இஸ்ரேலின் துணிச்சலான வீரர்களால் சின்வர் இறந்துவிட்டார். இதன் மூலம் போர் இறுதி கட்டத்தில் நுழைந்திருக்கிறது. போர் முடியவில்லை. ஹமாஸ் படையினர் ஆயுதங்களை போட்டுவிட்டு, அவர்கள் கடத்தி சென்றிருக்கும் 23 நாடுகளை சேர்ந்த 101 பணயக்கைதிகளை விடுவிக்கும்பட்சத்தில் போர் முடிவடையும்.

இஸ்ரேலிலிருந்து பிடித்து செல்லப்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பணயக்கைதிகளை நாங்கள் உயிருடன் மீட்டு வருவோம் என்று உறுதி கூறுகிறேன். ஈரானால் கட்டமைக்கப்பட்ட பயங்கரவாதம், நம் கண் முன்னே சரிந்து விழுந்துக்கொண்டிருக்கிறது. விரைவில் ஈரானின் ஆதிக்கம் முடிவுக்கு வரும். விரைவில் மத்திய கிழக்கில் அமைதியும், செழிப்பும் திரும்பும்" என்று கூறியுள்ளார்.

நெதன்யாகுவின் இந்த அறிவிப்பால் மேலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர் ஆபத்தில் தள்ளப்பட்டிருப்பதாக ஹமாஸ் விமர்சித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+