600 கி.மீ சுற்றிக்கொண்டு.. ஐநா கூட்டத்துக்கு போன நெதன்யாகு! பயம் இருக்குல்ல.. போர் எதுக்கு?
டெல் அவிவ்: ஐநா பொதுக் கூட்டத்தில் பங்கேற்க இன்று அமெரிக்க சென்றிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. ஆனால், அவரது விமானம் வழக்கமான பாதையை தவிர்த்து விட்டு, 600 கி.மீ தொலைவை சுற்றிக்கொண்டு சென்றிருக்கிறது. ஏன் இந்த சுத்து சுத்தணும்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வான்வழி தொலைவு 9,165 கி.மீ. நெதன்யாகு பயன்படுத்தும் போயிங் 767-300ER ரக விமானம் இந்த தொலைவை கடக்க 12.45 மணி நேரத்தை எடுத்துக் கொள்ளும். ஆனால் இன்று 15 மணி ஆகியிருக்கிறது. காரணம் இவரது விமானம் வழக்கமான பாதையில் செல்லாமல் வேறு பாதையில் போய் இருக்கிறது. மத்திய கிழக்கில் இருக்கும் இஸ்ரேலில் இருந்து அமெரிக்காவுக்கு போக எல்லா விமானங்களும் 'கிரேட்-சர்கிள்' என்கிற பாதையைத்தான் பயன்படுத்தும்.

மிஸ்டர் செக்யூரிட்டி
அதாவது இஸ்ரேலில் இருந்து புறப்படும் விமானங்கள் சைப்ரஸ், கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், அட்லாண்டிக் பெருங்கடல், கனடா என கடைசியாக அமெரிக்காவுக்கு வந்து சேரும். ஆனால் தலைவன் நெதன்யாகுவின் விமானம், கிரீஸையும், இத்தாலியையும் வழக்கம்போல கடந்து, திடீரென யுடர்ன் அடித்து 'ஜிப்ரால்டர் நீரிணை' வழியாக அட்லாண்டிக் கடலை நோக்கி சென்று, அங்கிருந்து அமெரிக்காவின் நியூயார்க் போய் தரையிறங்கியது. என்னடா இது? தீவிரவாதிகளை வேரறுக்க பிறந்த 'மிஸ்டர் செக்யூரிட்டிக்கு' வந்த சோதனை? என்று அவரது ஆதரவாளர்கள் பலரும் குழம்பி போயுள்ளனர்.
அட ஆமாங்க, நெதன்யாகு தன்னை மிஸ்டர் செக்யூரிட்டி என்றுதான் சொல்லிக் கொள்கிறார். அப்பேற்பட்ட நபர் எதுக்கு 600 கி.மீ சுத்திக்கிட்டு போகனும்? காரணம் இருக்கு.
கைது உத்தரவு
கடந்த 700 நாட்களுக்கும் மேலாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் தற்போது உச்ச கட்டத்தை எட்டி இருக்கிறது. 70 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் இந்த போரில் கொல்லப்பட்டிருக்கின்றனர். உலக நாடுகள் போருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில் இஸ்ரேல் செய்வது போர் குற்றம் என்று சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, நீதிமன்றமும் ஆமாம் இஸ்ரேல் செய்வது போர் குற்றம் என்று தீர்ப்பளித்து விட்டது. மட்டுமல்லாது இந்த குற்றத்திற்காக நெதன்யாகு, இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோரை கைது செய்யவும் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது.

காரணம் என்ன?
நம்மூர் நீதிமன்றம் மாதிரி, உத்தரவு கிடைத்தவுடன் நெதன்யாகுவை கைது செய்துவிட முடியாது. காரணம் சர்வதேச நீதிமன்றத்தை ஏற்றுக் கொள்ளாத நாடுகளில் அதன் உத்தரவுகள் செல்லுபடி ஆகாது. சரி அப்படின்னா நெதன்யாகுவை கைது செய்யவே முடியாதா? என்று கேட்டால், நிச்சயம் கைது செய்யலாம். சர்வதேச நீதிமன்றத்தின் விதிமுறைகளை ஏற்றுக் கொண்ட நாட்டிற்குள் நெதன்யாகு நுழைந்தால் தட்டி தூக்கிடலாம். இப்போது புரிகிறதா? ஏன் தலைவன் எக்ஸ்ட்ரா 600 கி.மீ தூரம் சுற்றிக்கொண்டு அமெரிக்கா போய் சேர்ந்திருக்கிறார் என்று!
கைது நிச்சயம்
வழக்கமான பாதையில் போனால் சைப்ரஸ், கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவற்றை கடக்க வேண்டும். 12-13 மணி நேர பயணத்தில் திடீரென இயந்திர கோளாறு, மோசமான வானிலை என தடங்கல் ஏற்பட்டால் உடனே விமானத்தை, இந்த நாடுகளில் ஏதாவது ஒன்றில் தரையிறக்க வேண்டும். ஆனால் இந்த நாடுகள் அனைத்தும் சர்வதேச நீதிமன்றத்தின் விதிகளை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே தரை இறங்கினால் கைது கன்பார்ம். ஒருவேளை கைது செய்யாமல் விட்டால், அந்நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்டுவிடும்.
ஐரோப்பிய நாடுகள்
ஏனெனில் இத்தாலியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் 24 மணி நேர தொடர் போராட்டத்தை நடத்தி நாட்டையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்கையில், தன் நாட்டில் தரையிறங்கிய நெதன்யாகுவை ஏன் கைது செய்யவில்லை என்று அரசுக்கு எதிரான கிளர்ச்சி நடக்கும். ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்திருக்கிறது. எனவே இந்த நாடுகளில் இறங்கினாலும் கைது நிச்சயம்.
இந்த காரணங்களால்தான் மிஸ்டர் செக்யூரிட்டி, 600 கி.மீ சுற்றி கொண்டு போயிருக்கிறார். மிஸ்டர் செக்யூரிட்டிக்கு, பாதுகாப்பே இல்ல போல என்று கலாய்த்துள்ள நெட்டிசன்கள், இவ்வளவு பயத்தை வைத்துக்கொண்டு எதுக்கு பாலஸ்தீனம் மீது போர் தொடுக்கணும்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
பைத்தியக்காரனாவே நெனச்சுட்டு இருக்கல நீ.. சைலண்டாக வேலை பார்த்த ஈரான்.. கள்ள மெளனம் காக்கும் சீனா! -
ஈரான் போரில் வீழ்ந்த 4-வது அமெரிக்க விமானம்.. ஈராக்கில் அமெரிக்க விமானம் விபத்தில் சிக்கியது எப்படி? -
உயிருக்கு உத்தரவாதமில்லை.. அமெரிக்காவுக்குள் நுழையாதீங்க! ஈரான் கால்பந்து அணிக்கு டிரம்ப் வார்னிங்! -
ஈரான் உச்ச தலைவர் சொன்ன மறுகணமே.. சீறி பாய்ந்த ஏவுகணைகள்! இஸ்ரேல் மீது 42வது அலை தாக்குதல் தொடங்கியது -
அமெரிக்க ராணுவ நிலைகள் மீதான தாக்குதல் தொடரும்.. ஈரானின் புதிய தலைவர் அறிவிப்பு! -
இறங்கி வரும் ஈரான்.. ஒரு வழியாக முடிவுக்கு வரும் போர்? திடீரென வந்த 3 முக்கியமான கண்டிஷன்கள் -
மொத்த மானமும் கப்பல் ஏறிடுச்சு.. எப்ஸ்டீனுடன் டைட்டானிக் போஸ் கொடுத்த டிரம்ப்! மர்ம நபர்கள் சம்பவம்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்!










Click it and Unblock the Notifications