அருண் விஜய்யின் 'குற்றம் 23' பட பாணியில்... 49 குழந்தைகளுக்கு 'அப்பா' ஆன டாக்டர்

Subscribe to Oneindia Tamil

ரோட்டர்டாம்: அருண் விஜய் நடிப்பில் வெளியான 'குற்றம் 23' திரைப்பட பாணியில், செயற்கை கருத்தரித்தலுக்காக வரும் பெண்களுக்கு தன்னுடைய உயிரணுவை செலுத்தி 49 குழந்தைகளுக்கு நெதர்லாந்து மருத்துவர் தந்தையாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அருண் விஜய் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'குற்றம் 23' திரைப்படத்தில் வில்லன், தன் மனைவியால் ஏற்பட்ட அவமானத்தை துடைப்பதற்காக செயற்கை ருத்தரித்தலுக்கு வரும் பெண்களுக்கு தன்னுடைய உயிரணுவை செலுத்தி கர்ப்பம் ஆக்குவார்.

அப்படி ஒரு சம்பவம் நெதார்லாந்தில் ஒரு மருத்துவர் நிகழ்த்தியுள்ளார். இவர் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகர் அருகே பிஜ்ராம் என்ற ஊரில் கார்பாத் என்ற மருத்துவர் செயற்கை கருத்தரித்தல் மையம் நடத்தி வந்துள்ளார்.

தந்தையான மருத்துவர்

தந்தையான மருத்துவர்

மருத்துவர் கார்பாத் தன்னிடம் வரும் பெண்களுக்கு அவரது உயிரணுவை செலுத்தி உள்ளார். இதன் மூலம் கர்ப்பமான அவர்கள் மகிழ்ச்சி அடைந்து குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ்ந்தனர். இப்படியே அவர் 49 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார்.

நீதிமன்றத்தில் வழக்கு

நீதிமன்றத்தில் வழக்கு

1980களில் தான் இவரது உயிரணுவில் ஏராளமானோர் பிறந்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரமே சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியே தெரிந்திருக்கிறது. பெற்றவர்கள் சாயலில் பிள்ளைகள் இருக்கவே பலர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளனர்.

மருத்துவர் மரணம்

மருத்துவர் மரணம்

இதற்கிடையில் 2009ம் ஆண்டே தனது கிளினிக்கை மூடிவிட்ட மருத்துவர் கார்பாத். தனது 89 வயதில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உயிரிழந்துவிட்டார்.

கார்பாத்.தந்தை

கார்பாத்.தந்தை

எனினும் தந்தை யார் என்பதை தெரிந்து கொள்வதற்காக 49 பேரும் ரோட்டர்டாம் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் கார்பாத்.தான் தன்னை நாடி வந்த பெண்களுக்கு உயிரணுக்களை செலுத்தியது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி காதர்பாத் தான் தங்களது தந்தை என்பதே அறிந்த 49 பேரும் அறிந்து கொண்டனர்.

அப்பாவை அறிந்த மகன்

அப்பாவை அறிந்த மகன்

ஜோய் என்பவர் இது தொடர்பாக அளித்த பேட்டியில், 11 ஆண்டுகளாக என் தந்தை யார் என்பது தெரியாமல் இருந்தேன். இப்போது அதற்கு விடை கிடைத்துவிட்டது. என் தந்தையின் பெயர் டாக்டர் கார்பாத் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+