ஐரோப்பிய நாடுகளில்.. ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு தொடரும் தடை.. அச்சத்தில் பொதுமக்கள்.. காரணம் இதுதான்
ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் தற்போது ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பயன்பாட்டிற்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா பரவலின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தியுள்ளன.

தடுப்பூசி செலுத்தும் பணிகள்
ஐரோப்பிய நாடுகளில் பைசர், மாடர்னா மற்றும் ஆக்ஸ்போராட் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தாண்டு தொடக்கம் முதல் ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெறுகிறது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும் முதியவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

ஐரோப்பிய நாடுகள் தடை
இந்நிலையில், மோசமான பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பயன்பாட்டிற்கு நெதர்லாந்து அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. அண்டை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் சிலரது உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டதால், தடுப்பூசிக்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே தற்போது நெதர்லாந்து நாட்டிலும் தடுப்பூசிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்க விளைவுகள்
நெதர்லாந்து நாட்டில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் யாருக்கும் மோசமான பக்கவிளைவுகள் ஏற்படவில்லை. மேலும், ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு ஏதாவது திடீர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து நெதர்லாந்து சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்டை நாடுகளில் தடுப்பூசி காரணமாக அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடை விதித்துள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்திலும் தடை
இதையே காரணமாகக் கூறி அயர்லாந்தும் தற்போது ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்குத் தடை வித்துள்ளது. ஏற்கனவே, நார்வே, டென்மார்க், ஐஸ்வாந்து உள்ளிட்ட நாடுகளில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேவையான கொரோனா தடுப்பூசிகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இப்படி திடீரென்று விதிக்கப்படும் தடைகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளைப் பாதித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு விளக்கம்
நார்வே, டென்மார்க், ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்குத் தடை விதித்துள்ளன. இருப்பினும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என்றும் மிகக் குறைவான நபர்களுக்கே உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக ஒட்டுமொத்தமாகத் தடுப்பூசிக்குத் தடை விதிக்க தேவையில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications