"ப்ளீஸ் விட்டுடுங்க.." கண்ணீர் விட்டு கதறிய 25 வயது பெண்! ஹமாஸ் படை செய்த காரியம்! உச்சக்கட்ட ஷாக்

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் இப்போது போர் தொடங்கியுள்ள நிலையில், இளம்பெண் ஒருவரை ஹமாஸ் படையினர் சிறைபிடித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் மீது நேற்று யாருமே எதிர்பார்க்காத வகையில் ஹமாஸ் படைகள் தாக்குதலை ஆரம்பித்தது. இஸ்ரேல் நாட்டில் சமீப காலங்களில் இந்தளவுக்கு ஒரு மோசமான தாக்குதல் நடந்ததே இல்லை.

 Netizens shocked to see Israeli Woman kidnapped by Hamas Group in Israel war

எந்தவொரு நாட்டிலும் போர் நடந்தாலும் அங்குள்ள அப்பாவி பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இதற்கிடையே அப்படியொரு ஷாக் சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ஷாக் சம்பவம்: அங்குள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் 25 வயது இளம்பெண் ஒருவரைக் கடத்திச் செல்லும் வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது. அதுவும் இஸ்ரேல் நாட்டில் இசை திருவிழா நடைபெற்ற நிலையில், அங்கே உள்ளே புகுந்து அந்த பெண்ணை கடத்தியுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ஹமாஸ் போராளிகள் சிலர் பைக்கின் பின்புறம் வைத்து இந்த பெண்ணை கடத்திச் செல்கிறார்கள். கடத்தப்பட்ட இந்த பெண் 25 வயதான நோவா ஆர்கமணி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் அந்த பெண், தன்னை கொலை செய்துவிடுவார்கள் என்று அஞ்சி அலறுவதும் அதில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், "ப்ளீஸ் விட்டுருங்க.. என்னைக் கொன்றுவிடாதீர்கள்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்" என்று அந்த பெண் கதறுகிறார்.

இளம்பெண்: இருப்பினும், அவரை சுற்றி இருந்த அந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் அதைக் கண்டு கொள்ளாமல் அந்த இளம்பெண்ணைக் கடத்திச் செல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அருகில் தான் அந்த பெண்ணின் காதலன் அவி நாதனும் இருந்துள்ளார். இருப்பினும், அவராலும் அந்த பெண்ணை காப்பாற்ற முடியவில்லை. அவரை சில ஹமாஸ் பயங்கரவாதிகள் சுற்றி வளைத்துப் பிடித்து இழுத்துச் செல்வதும் அதில் பதிவாகியுள்ளது.

தற்போது வந்த தகவல்படி அந்த பெண் மற்றும் இளைஞன் என இருவருமே மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இஸ்ரேல் தெற்கு பகுதியில் உள்ள ஓர் இடத்தில் இசைத் திருவிழாவில் கலந்து கொள்ளச் சென்றுள்ளனர். அந்த நேரம் பார்த்து ஹமாஸ் பயங்கரவாதிகள் உள்ளே வர இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அவி நாதனைக் காணவில்லை என்று அவரது சகோதரர் புகார் அளித்துள்ளார். அதன் பின்னரே இந்த வீடியோ குறித்துத் தெரிய வந்துள்ளது.

என்ன நடந்தது: இது குறித்து அவரது சகோதரர் கூறுகையில், "முதலில் எங்களுக்கு என்ன நடந்தது எனப் புரியவில்லை. ரொம்ப அச்சமாக இருந்தது. நாங்கள் பல முறை போன் செய்த போதிலும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை. அந்த பெண்ணையும் பாவம் கடத்தியுள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனப் பிராத்திக்கிறேன்" என்று கூறுகிறார்.

இவர்கள் இருவர் மட்டுமின்றி, நேற்று அங்கு நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. இசை நிகழ்ச்சிக்கு மக்கள் கூடியிருந்த நிலையில், அந்த நேரம் பார்த்து ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்துள்ளது. உடனே அங்கிருந்து அவர்கள் தப்பியோட முயன்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இப்போது அவர்களை தேடும் முயற்சியிலும் இஸ்ரேல் அரசு இறங்கியுள்ளது.

வீடியோ: இணையத்தில் பரவும் மற்ற வீடியோக்களில் சாலை முழுக்க பொதுமக்களின் சடலங்களைப் பார்க்க முடிகிறது. அந்தளவுக்கு இஸ்ரேலில் இப்போது மோசமான நிலையே நிலவுகிறது. இப்போது இஸ்ரேல் பதில் தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், இந்த போர் மேலும் சில காலம் நீட்டிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+