ஒரு குட்டி தூக்கம் போட்டது தப்பாய்யா...!
அலுவலகத்தில் பாக்.அமைச்சர் தூங்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெண் அமைச்சர் ஒருவர் தன் ஆபீஸ் நேரத்தில் சேரில் தூங்கி வழியும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.
இம்ரான் கான் தலைமையில் இப்போதுதான் பாகிஸ்தானில் ஒரு அரசு அமைந்திருக்கிறது. இந்த அரசில் மனித உரிமைகள் துறை அமைச்சராக இருப்பவர் சைரின் மசாரி. இவர்தான் ஆபீஸ் நேரத்தில் தன் சீட்டில் சாய்ந்து கொண்டு தூங்கி கொண்டிருப்பவர்.

போட்டோ எடுத்தனர்
இப்படி அமைச்சர் தூங்கி கொண்டிருப்பதை அந்த ஆபீசில் வேலை பார்ப்பவர்களே போட்டோவும் பிடித்து அதை சமூகவலைதளங்களிலும் போட்டுவிட்டார்கள்.
|
களைப்பால் தூங்குகிறார்
இந்த வீடியோ பிய்த்துக் கொண்டு ஓடுகிறது. நிறைய பேர் கன்னாபின்னாவென்று கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர், "அனைத்து மனித உரிமை பிரச்னைகளையும் தீர்த்த களைப்பில் இருக்கிறார்" என்று கிண்டலும் அடித்துள்ளார்.
|
ஆதரவும் பெருகுகிறது
மற்றொருவர், "தூங்குவது கூட மனித உரிமைதான்" என்று கமெண்ட் அடித்துள்ளார். ஒருசிலர், "இப்படி அலுவலகத்தில் கொஞ்ச நேரம் கண் மூடி அமர்ந்து இருப்பது தவறு ஒன்றும் இல்லை" என்றும் சொல்லி உள்ளனர் என்று கூறி அமைச்சருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
|
ஆதரவும், எதிர்ப்பும்
மதிய உணவு இடைவேளையின்போது அமைச்சர் தூங்கி இருக்கலாம். போட்டோ எடுத்த நபர், அமைச்சரின் தனிப்பட்ட உரிமையில் தலையிட்டுள்ளார். மேலும் அந்த நபர் அலுவலக ரகசியங்களை கூட வெளியிட கூடும். எனவே அவரை கண்டுபிடித்து வேலையை விட்டு நீக்க வேண்டும்' என்றும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.அமைச்சருக்கு ஆதரவும், எதிர்ப்பும் மாறி மாறிவந்து கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
