இந்தியாவை பழிவாங்கும் வங்கதேசம்? நம் நாட்டுடன் மோதும் நபருக்கு பெரிய பதவி.. யார் இந்த ஜஹாங்கீர்?
டாக்கா: வங்கதேசத்தில் நடந்த பிஎன்பி ஆட்சியின்போது நம் நாட்டுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த முன்னாள் லெட்டினன்ட் ஜெனரல் ஜஹாங்கீர் ஆலம் சவுத்ரிக்கு தற்போதைய அந்தநாட்டின் இடைக்கால அரசில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் இடைக்கால அரசின் உள்துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தான் வங்கதேசம் நம்மை பழிவாங்க முயல்கிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. யார் இந்த ஜஹாங்கீர் ஆலம் சவுத்ரி? அவர் நம்நாட்டுக்கு எதிராக எப்படி செயல்பட்டார்? இப்போது எப்படி பிரச்சனைகள் வரலாம்? என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
வங்கதேசம்.. அண்டை நாடான இங்கு அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. அந்த கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா பிரதமராக செயல்பட்டு வந்தார். இவர் கடந்த 2009 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை தொடர்ந்து பிரதமராக நீடித்து வந்தார். இவர் நம் நாட்டுடன் நெருங்கிய நட்பில் இருந்தார். நம் நாட்டில் காங்கிரஸ், பாஜக என்று மத்தியில் ஆட்சி மாறினாலும் கூட தொடர்ந்து நட்பு பாராட்டி வந்தவர் தான் ஷேக் ஹசீனா.

இந்நிலையில் தான் வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திய போராட்டம் விஸ்வரூபம் அடைந்தது. இந்த போராட்டம் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாறியது. இதையடுத்து கடந்த 5ம் தேதி ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்துவிட்டார். தற்போது அவர் நம் நாட்டில் தான் ரகசிய இடத்தில் பாதுகாப்பாக உள்ளார்.
தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 16 பேர் இடம்பெற்றுள்ளனர். இடைக்கால அரசின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனிஸ் செயல்பட்டு வருகிறார். இதில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைய காரணமாக இருந்த போராட்டத்தை முன்னெடுத்த 26 வயது நிரம்பிய டாக்கா பல்கலைக்கழக மாணவர்களான நஹித் இஸ்லாம் மற்றும் ஆசீப் மஹ்மூத் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இதற்கிடையே ஷேக் ஹசீனாவை இந்தியா மீண்டும் வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று வழக்கறிஞர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் பிஎன்பி எனும் வங்கதேச தேசியவாத கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இல்லாவிட்டால் இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் என எச்சரித்துள்ளன. ஆனால் நம் நாடு ஷேக் ஹசீனாவுக்கு பக்கப்பலமாக இருந்து வருகிறார். அவருக்கு தற்காலிகமாக தங்கி கொள்ள அனுமதி அளித்துள்ளது. இத்தகைய சூழலில் தான் வங்கதேசம் நம்மை பழிவாங்க முயற்சிக்கிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது
இதற்கு காரணம் தற்போது இடைக்கால அரசின் உள்துறை ஆலோசகராக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஜஹாங்கீர் ஆலம் சவுத்ரி நியமனம் செய்யப்பட்டு இருப்பது தான். உள்துறை ஆலோசகராக இருந்த எம் சகாவத் ஹூசைனுக்கு பதில் இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தான் தற்போது பிரச்சனையாக மாறலாம் என்று கூறப்படுகிறது. அதாவது ஜஹாங்கீர் ஆலம் சவுத்ரி நம் நாட்டுக்கு எதிரான மனநிலை கொண்டவர். அதனை அவர் பலமுறை நிரூபித்துள்ளார்.
அதாவது ஜஹாங்கீர் ஆலம் சவுத்ரி வங்கதேசத்தின் எல்லை காவல் படையில் முன்னாள் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றினார். இவர் இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தவர். எல்லை காவல் படையில் அவர் பணியாற்றியபோது வங்கதேசத்தை இரண்டாக உடைக்கும் பயங்கரவாதிகளுக்கான 90 பயங்கரவாத முகாம்களை இந்தியா ஏற்பாடு செய்துள்ளது என்று கூறினார். மேலும் கடந்த 2005ம் ஆகஸ்ட் 17 ம் தேதி வங்கதேசத்தில் கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்தியா தான் காரணம் என்று குற்றம்சாட்டினார்.
மேலும் தற்போதைய பிரச்சனைக்கும் இந்தியா தான் காரணம் என்று அவர் குற்றம்சாட்டலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது வங்கதேச இடைக்கால அரசு சார்பில் ஜஹாங்கீர் ஆலம் சவுத்ரிக்கு உள்துறையின் ஆலோசகர் பொறுப்பு என்பது வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்கவும், மேற்கொண்டு பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கான ஐடியாக்களை ஜஹாங்கீர் ஆலம் சவுத்ரி வழங்குவார். இருப்பினும் கூட அவர் இந்தியா மீது பகீர் குற்றச்சாட்டுகளை வைக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏனென்றால் தற்போது வங்கதேசத்தில் இருந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நம் நாட்டில் தான் தஞ்சமடைந்துள்ளார். இதனால் இனி வங்கதேசத்தில் ஏதேனும் போராட்டம் நடந்தாலோ அல்லது தற்போது நடந்த மாணவர்கள் போராட்டம் பற்றிய கேள்விகள் எழுந்தாலோ சட்டம் ஒழுங்கு பற்றி பேசினாலோ நிச்சயம் இந்தியாவை குறிவைத்து ஜஹாங்கீர் ஆலம் சவுத்ரி பேசலாம். மேலும் அவர் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பாக இருந்தாலும் கூட தொடர்ச்சியாக புகார் கூறும்போது அந்நாட்டு மக்களுக்கு நம் நாட்டின் மீதான தவறான கண்ணோட்டம் வரலாம். இதனால் வங்கதேசம் ஜாங்ஹீர் ஆலம் சவுத்ரியை உள்துறை ஆலோசகராக நியமித்து பழிவாங்குகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications