உங்களுக்கு டென்ஷன், பதற்றம் இருக்கா?.. கவலைய விடுங்க, ஒரே நாளில் சரியா போகும்!
நியூயார்க்: மனச்சோர்வு பிரச்சினையை மாத்திரை மூலம் ஒரே நாளில் குறைக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
இன்றைய காலகட்டத்தில் மன உளைச்சலும், அதைச் சார்ந்த மனச்சோர்வு, பதற்றம் போன்ற பிரச்சினைகளும் மக்களுக்கு சாதாரணமாகிவிட்டன. பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட உணவு, துரித வாழ்க்கை முறை போன்றவை இதற்கு காரணம்.

மாதக்கணக்கில் சிகிச்சை
மனச்சோர்வுக்கு ஆளானவர்களுக்கு தற்போது, கவுன்சலிங் மூலமும், மாத்திரைகள் மூலமும் சிகிச்சையளிக்கப்படுகிறது. மிகவும் தாமதமாக மருத்துவர்களை அணுகுவோருக்கு ஷாக் ட்ரீட்மென்டுகள் கொடுக்கப்படுவதும் உண்டு. பொதுவாக மருந்துகளை மாதக்கணக்கில் எடுத்துக்கொண்டால்தான், படிப்படியாக மனச்சோர்வு குணமடையும்.

24 மணி நேரம்
இந்நிலையில்தான், மனச்சோர்வை குறைந்த நாட்களில் குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள். மேரிலேண்ட் பல்கலைக்கழக மருந்தியல் துறை பேராசிரியர் ஸ்காட் தாம்ப்சன் கூறுகையில், புதிய மருந்து 24 மணி நேரத்தில் மனச்சோர்வை விரட்டும் என்றார்.

பக்க விளைவு இல்லை
புதிய வகை மூலப்பொருட்களால் உருவாக்கப்படும் மனச்சோர்வு விரட்டி மருந்தால், பக்க விளைவுகளும் ஏற்படாதாம். இந்த மருந்து, மூளையுடன் மட்டுமே செயல்படக்கூடியது. மருந்தின் மூலக்கூறுகள் எலியின் உடலில் சோதித்து பார்க்கப்பட்டுள்ளன. மகிழ்ச்சியான செயல்பாட்டை எலிகள் உடனே காண்பித்தனவாம்.

பயன்படும்
இம்மருந்து மூலம், 24 மணி நேரத்திற்குள் மனச்சோர்வை நீக்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது. இன்னும் மனிதர்களிடம் இம்மருந்து சோதித்து பார்க்கப்படவில்லை. தற்கொலை எண்ணத்தோடு இருக்கும், மனச்சோர்வாளர்களுக்கு கூட உடனடியாக மன மகிழ்ச்சியை தர வல்ல இந்த மூலப்பொருள், வருங்காலங்களில் பலருக்கும் பயனுடையதாக இருக்கும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications