நாம் நினைத்ததை விட பெரிய "ஐஸ் கட்டி"யாக இருக்கிறது புளூட்டோ!: நாஸா
வாஷிங்டன்: புளூட்டோ.. மனிதனுக்கு வியப்பை அளித்தபடி தொலை தூரத்தில் கமுக்காக இருக்கும் கிரகம். இன்று இந்த கிரகத்தைப் பற்றி ஆராய அனுப்பப்பட்ட நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம், புளூட்டோவைக் கடந்து செல்லவுள்ளது. இந்த நிலையில் நியூ ஹாரிஸான்ஸ் மூலம் கிடைத்துள்ள படங்களை வைத்துப் பார்க்கும்போது நாம் நினைத்ததை விட புளூட்டோ கிரகத்தில் பனிக்கட்டிகள் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.
நியூ ஹாரிஸான்ஸ் மூலம் கிடைத்துள்ள படங்களைப் பார்க்கும்போது புளூட்டோவின் உண்மையான சைஸும் கூட கிட்டத்தட்ட உறுதிபடத் தெரிய வந்துள்ளது.
மேலும் இது நாம் நினைப்பது போல குள்ள கிரகமாகவும் இல்லை. மாறாக நெப்ட்யூனுக்கு அப்பால் உள்ள மிகப் பெரிய கிரகமாகவும் இருக்கிறது. இதெல்லாம் நமக்குப் புதிதாக கிடைத்துள்ள தகவல்களாகும்.

சுற்றளவு 2370 கிலோமீட்டர்
புளூட்டோவின் உண்மையான சுற்றளவு 2370 கிலோமீட்டர் என்று தற்போது தெரிய வந்துள்ளது. இதில் 20 கிலோமீட்டர் கூட இருக்கலாம் அல்லது குறைய இருக்கலாம். இது ஏரிஸ் என்ற இன்னொரு குள்ள கிரகத்தை விட 30 மைல் அகலமாகும்.

ஏரிஸை விட பெரியது
ஏரிஸ் குள்ள கிரகம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் புளூட்டோவை, 9வது கிரகம் என்ற அந்தஸ்திலிருந்து 2006ம் ஆண்டு விஞ்ஞான உலகம் தகுதி நீக்கம் செய்தது. ஏரிஸ் கிரகத்தின் சுற்றளவானது 2326 கிலோமீட்டர் ஆகும். இதில் 12 கிலோமீட்டர் கூட இருக்கலாம் அல்லது குறைய இருக்கலாம்.

நினைத்ததை விட பெரியது
புளூட்டோ 1930ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கூறப்பட்ட அளவுகளை விட அது உள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது. அப்போது கணிக்கப்பட்டதை விட பெரியதாக உள்ளது புளூட்டோ.

நிறைய ஐஸ் இருக்கலாம்
மேலும் புளூட்டோவில் நாம் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் ஐஸ் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. உண்மையில் புளூட்டோவில் மிகப் பெரிய பனி துருவம் உள்ளது. அதில் மீத்தேன் அதிக அளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தக் கிரகத்திலிருந்து அதிக அளவில் நைட்ரஜன் வெளியாவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிலவுகளின் அளவு
புளூட்டோவின் மிகப் பெரிய நிலவான சரோனின் சுற்றளவு 1208 கிலோமீட்டராகும். மேலும் சிறிய ஐஸ் நிரம்பிய நிலவுகளான நிக்ஸ் மற்றும் ஹைட்ரா ஆகியவை முறையே 35 மற்றும் 45 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளன.

புளுட்டோவைக் கடக்கும்போது மேலும் பல தகவல்கள்
இவையெல்லாம் நியூ ஹாரிஸான்ஸ் நமக்கு அனுப்பியுள்ள படங்களின் மூலம் தெரிய வந்துள்ளன. நியூ ஹாரிஸான்ஸ் புளூட்டோவை கடக்கும்போது கிடைக்கும் படங்களை வைத்து இவை குறித்த மேலும் பல புதிய தகவல்கள் நமக்குக் கிடைக்கலாம்.

ஆபத்து வருமா
திங்கள்கிழமையன்று புளூட்டோ குறித்த பல புதிய புகைப்படங்களை நியூ ஹாரிஸான்ஸ் பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. இதற்கிடையே, புளூட்டோவைச் சுற்றிலும் விண்வெளித் துகள்கள் பெரும் கூட்டமாக விரவிக் கிடப்பதால் அதனால் நியூ ஹாரிஸான்ஸ் விண்கலத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற ஒரு அச்சமும் மண்டிக் கிடக்கிறது. இருப்பினும் அப்படி எதுவும் நடக்காது என்று விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

தகவல் கிடைக்க பல மணி நேரமாகும்
தற்போது நியூ ஹாரிஸான்ஸ் விண்கலமானது புளூட்டோவிலிருந்து கிட்டத்தட்ட 3 பில்லியன் மைல் தூரத்தில் உள்ளது. இந்த நிலையில் விண்கலத்திலிருந்து பூமிக்கு வரும் சிக்னலானது, பூமியை வந்தடைய 4.5 மணி நேரமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விண்கலமானது, புளூட்டோவைக் கடக்கும்போது எடுக்கப்படும் புகைப்படங்களை உடனுக்குடன் நம்மால் பெற முடியாது.

பெருத்த சஸ்பென்ஸில் விஞ்ஞானிகள்
எனவே பெருத்த சஸ்பென்ஸுடன், பூமியில் உள்ள நியூ ஹாரிஸான்ஸ் தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் காத்திருக்கிறார்கள். விண்கலம் நல்லபடியாக தனது செயல்பாட்டை நிறைவேற்றியதா என்பதும் கூட பல மணி நேரங்களுக்குப் பிறகே நமக்குத் தெரிய வரும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications