பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்! 7.2 ரிக்டர் ஆக பதிவு

குஸ்தர் பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம்ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் 14.8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீடுகள் கடுமையாக குலுங்கின. மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியேறினர். அவாரன் நகரில் இருந்து 96 கி.மீ. தொலைவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் மிக குறைவு. போதிய மருத்துவ வசதிகள், சாலை வசதிகள் இல்லை. தொலைதூரத்தில் இருப்பதாலும், ராணுவம் மீது போராளிகள் தாக்குதல் நடத்துவதாலும் மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அவாரன் மாவட்டத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் 359 பேர் பலியாகி உள்ளனர். 765 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications