மரணத்திற்கு பிறகும் கம்பீரமாய் தோன்றும் சேகுவாரா: புதிய படங்கள்
உலகம் முழுவதும் புரட்சி விதைகளை தூவிய, புரட்சியாளர்களால் சே என்று அன்போடு அழைக்கப்படும் சேகுவாராவின் மரணத்திற்கு பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும், கம்பீரத்துடன் சேகுவாராவின் முகம் அந்த புகைப்படத்தில் காட்சியளிக்கிறது.
க்யூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்டு, ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டவர் சேகுவாரா.
வெளிநாடு பயணத்திற்குப்பின்னர் 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை பிடல் காஸ்ட்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான வெளியுலகுக்கு சே குவரா நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன் பிறகு சேகுவராவைக் காணவில்லை. எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை.

சுட்டுக்கொலை
பொலிவியாவில் கடந்த 1967ஆம் ஆண்டு அந்நாட்டு ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பிறகு, அவரது உடல் ரகசிய இடத்தில் புதைக்கப்பட்டது.

கொல்லப்பட்ட புகைப்படங்கள்
அப்போது புகைப்பட கலைஞர் ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், பொலிவியாவில் மத போதகர் லூயிஸ் கார்டேரா என்பவரிடம் இருந்தன.

சேகுவாரா புகைப்படங்கள்
2012ஆம் ஆண்டில் அந்த மத போதகர் இறந்தபோது, அவரது உடைமைகளை உறவினர்கள் சோதனையிட்டதில், சேகுவாராவின் புகைப்படங்கள் இருந்தது தெரிய வந்தது.

வெளியிட்டது யார்?
இதையடுத்து அந்த புகைப்படங்களை, அவரது உறவினரும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவருமான இமானுல் ஆர்டியா என்பவர் தனது நாட்டுக்கு எடுத்து வந்தார். தற்போது அந்தப் புகைப்படங்களை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.

கம்பீர சே
அந்த புகைப்படங்களில், ஒரு படத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும், கம்பீரத்துடன் சேகுவாராவின் முகம் இருப்பது போன்றும், மற்றொரு படத்தில் சேகுவாராவின் உடல் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருப்பதும் இருக்கின்றன.

செய்தி நிறுவன புகைப்படக்காரர்
சேகுவாரா கொல்லப்பட்ட பிறகு, ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் மார்க் ஹட்டனால் எடுக்கப்பட்ட புகைப்படமே சர்வதேச நாளிதழ்களில் வெளியாகின. அதுதவிர, வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. எனவே இந்த புகைப்படங்களை மதபோதகர் கார்டேராவிடம் மார்க் ஹட்டனே கொடுத்திருக்கலாம் என இமானுல் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications