”மோடபினில்” மாத்திரை சாப்பிட்டால் மூளை நன்றாக வேலை செய்யுமாம் - ஆய்வில் தகவல்!
லண்டன்: லண்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மோடபினில் (Modafinil) என்கிற மாத்திரை புத்திசாலித்தனத்தை தூண்டுவதற்கு உதவுவதாக தெரிவித்துள்ளனர். இதனை ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
நீண்ட நேரம் பணிபுரியும் காவல் துறையினருக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் 24 வெவ்வேறு துறைகளின் கீழ் சோதனை செய்யப்பட்டது.
இதில் திட்டமிடல், முடிவெடுப்பது, ஞாபக சக்தி, கற்றல் திறன் மற்றும் படைப்பாற்றல் போன்ற அறிவாற்றல் சம்பந்தப்பட்டவற்றில் மேம்பாடு ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

அதிகரிக்கும் திறன்:
இந்த ஆராய்ச்சிக் குழுவில் பங்கு வகித்த அன்னா கேத்தரின் ப்ரெம் என்பவர், "இம்மாத்திரையில் சில பக்க விளைவுகள் இருப்பினும் இது புத்திசாலித்தனத்தை மேம்படுத்த உதவுகின்றது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்வுக்கு தயாராக உதவும்:
ஆகவே, தூங்குவதில் குறைபாடு உள்ளவர்களுக்கும், தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கும் இந்த மாத்திரை உதவும் என்பது இந்த ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது.

மருத்துவர் பரிந்துரை அவசியம்:
இங்கிலாந்து நாட்டில் சில நிறுவனங்களால் விற்கப்படும் இந்த மாத்திரைகள், அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் மருத்துவரின் பரிந்துரைப்படி விற்பனை செய்யப்படுகின்றன.

எங்கும் தடை இல்லை:
மக்கள் இந்த மாத்திரைக்கு அடிமையாகலாம் என்பதால் இந்த விதிமுறை கடைபிடிக்கப்பட்டுள்ளது. எனினும், எந்த நாட்டிலும் இந்த மாத்திரைக்கு தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான்!












Click it and Unblock the Notifications