'இங்கிலீஷ் பேசினாலும் தமிழன்டா' முழக்கத்துடன் உருவாகிறது புதிய தமிழ் அமைப்பு 'டயா'!
சான் அன்டோனியா (யு.எஸ்) : அமெரிக்கத் தமிழ் இளைஞர்களை ஒருங்கிணைக்க ‘தமிழ் அமெரிக்கன் யூத் அசோசியேஷன்' (TAYA) என்ற தேசிய அளவிலான புதிய அமைப்பை தொடங்கியுள்ளார்கள் அங்கு வாழும் தமிழர் இளைஞர்கள்.
தமிழ் இளைஞர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் மூன்று நாள் மாநாடு மே 23 ம் தேதி சான் அன்டோனியோ வின்ட்ஹம் கார்டன் ரிவர்வாக் ஹோட்டலில் நடைபெற உள்ளது.

டெஸ்லா 'சிஐஓ' ஜெய் விஜயன்
டெஸ்லா மோட்டார்ஸ் சிஐஓ ஜெய் விஜயன் TAYA கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். தன்னுடைய அனுபவங்களை இளைஞர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
நண்பர்களுடன் இணைந்து TAYA அமைப்பை தொடங்கியுள்ள 21 வயது கணபத் ராமு இந்த அமைப்பு குறித்து பல்வேறு தகவல்களை நம்மிடம் பரிமாறிக்கொண்டார். அவர் கூறியவற்றிலிருந்து...
இடைவெளியை சமன் படுத்துவோம்
அமெரிக்கத் தமிழ் இளைஞர்களுக்கு தாங்கள் தமிழர் என்ற இன உணர்வு இருந்த போதிலும், பெரும்பான்மை தமிழர்களோடு இணைந்து செயல்பட முடியாத நிலை உள்ளது.
சக அமெரிக்கர்களுடன் அமெரிக்க முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாலும், சரளமாக தமிழ் மொழியில் உரையாட முடியாததாலும் சற்று ஒதுங்கியே இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட இளைஞர்களுக்கென்று தனியாக ஒரு அமைப்பை உருவாக்கி, தமிழர் என்று பெருமையுடன் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளச் செய்வதும், ஏனைய தமிழர்களோடு இணைந்து செயல்படுதுவதும் தான் TAYA வின் முக்கிய நோக்கமாகும்.

மற்ற மொழியினரையும் ஏற்போம்
தமிழர்களின் வரலாறு, பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை தமிழர்களிடம் மட்டுமே வலியுறுத்தி வந்தால், நமது அடையாளம் மற்றவர்களுக்கு தெரியாமலேயே போய்விடும். தமிழர்களின் சிறப்பை உலகம் அறிய வேண்டுமென்றால், மற்ற மொழி பேசுபவர்கள் நம்மைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும்.
அமெரிக்க கல்லூரியில் படிக்கும் தமிழ் இளைஞர்களுக்கு ஏனைய மொழியினரிடம் நல்ல தொடர்பு மற்றும் நட்பு உண்டு. அதன் மூலமாகவே நிறைய பேர் தமிழர்களைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.
மற்ற மொழியினரையும் அரவணைத்து, நம் மொழி, பண்பாடு கலாச்சாரத்தை பரப்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, TAYA அனைத்து மொழியினரையும் வரவேற்கிறது. பெங்காலி, தெலுங்கு பேசும் இளைஞர்கள் ஏற்கனவே அமைப்பில் இணைந்துள்ளார்கள்.

தேசிய அளவில் ஒன்று சேர்வோம்
தேசிய அளவில் தமிழ் இளைஞர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும், பல்வேறு வாய்ப்புகளை பகிர்ந்து கொள்ளவும் TAYA வழி வகை செய்கிறது.
அமெரிக்காவின் எந்த மூலையில் இருந்தாலும், அறிமுகம் ஆகிக்கொள்ளவும், படிப்பு, தொழில். வேலை வாய்ப்புகள் போன்றவற்றில் இணைந்து செயல்படவும், புதிய தொடர்புகள் உருவாக்கிக் கொள்ளவும் TAYA முன்னுரிமை அளிக்கிறது. கணிணி தொழில் நுட்பம், சமூகதளங்கள் ஆகியவற்றை முழுமையாக பயன்படுத்தி இதை செயல்படுத்த உள்ளோம்.

முன்னோடிகளின் அனுபவங்களைப் பெறுவோம்
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த தமிழர்களை அழைத்து வந்து, அவர்களுடைய அனுபவங்களை இளைஞர்களுடன் பகிர்ந்து கொள்ள மேடை அமைத்துக் கொடுப்பது TAYA வின் இன்னொரு முக்கிய பணியாகும்.
தமிழர்கள் அல்லாத சாதனையாளர்களையும் அழைத்து வந்து, அவர்களுடைய வெற்றி ரகசியங்களையும் தமிழ் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும் முடிவு செய்துள்ளோம்.
பல்வேறு தரப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது, நம் இளைஞர்களும் பல புதிய சாதனைகள் புரிவார்கள் என்று நம்புகிறோம்.

அரசாங்கத்தில் பங்கேற்போம்
அமெரிக்க தமிழ் இளைஞர்கள் மருத்துவர்களாக, பொறியியல்,கணிணித்துறை வல்லுனர்களாக வெற்றி பெற்று வருவது சாதாரண விஷயம் ஆகிவிட்டது.
மார்க்கெட்டிங், மேனஜ்மெண்ட், கார்போரேட் உலகம், மீடியா, க்ரியேட்டிவ் ஆர்ட்ஸ் என அனைத்து துறைகளிலும் தற்போது காலூன்றி வருகிறார்கள்.
அரசியல் ஆர்வம் உள்ளவர்களும் அனேகம் பேர் உண்டு. ஆனால் அதற்கு அமைப்பு ரீதியாக சரியான பின்புலம் இல்லாததால், மேற்கொண்டு செயல்பட முடியாமல் இருக்கின்றனர். அமெரிக்கர்கள் உள்ளிட்ட மற்ற மொழியினரையும் அரவணைத்து செயல்படும் TAYA, அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு மேடையாக விளங்கும்.
டாக்டர் ராஜன் நடராஜனிடம் அரசியல் பயில்வோம்
அமெரிக்க அரசியலில் கோலோச்சும் டாக்டர் ராஜன் நடராஜன் உள்ளிட்ட தமிழர்களுடனும், ஏனைய அரசியல் பிரபலங்களுடனும் இணைப்புப் பாலம் ஏற்படுத்தவும், அவர்களுடைய அனுபவங்களை பயன்படுத்திக் கொள்ளவும் TAYA முயற்சிகள் எடுக்க உள்ளது.
அடுத்த தலை முறை தமிழர்கள் அமெரிக்க அரசியலில் வெற்றி பெறும் போது நமது அடையாளம் தனித்தன்மையுடன் நிலை நாட்டப்படும். பல்வேறு நன்மைகளும் கிட்டும்.
அனிருத் - ஆதி இசையும் ரசிப்போம்

நாள் முழுக்க சக அமெரிக்கர்களுடன், அமெரிக்க சூழலில் வாழ வேண்டிய நிலையில், பெற்றோர்களிடம் மட்டுமே தமிழில் உரையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. மற்றவர்கள் தங்களது தமிழை கேலி செய்வார்களோ என்ற தயக்கத்தினால், தமிழ் மொழியோடு அந்நியப்பட்டு நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதே சமயத்தில், Rap, Rock, Pop போன்ற அமெரிக்க இசை வடிவத்தை தமிழ் பாடல்களில் கேட்கும் போது, தானாகவே தமிழ் மொழியுடன் தொடர்பும் உண்டாகிறது. தற்போதைய அமெரிக்க இளைஞர்களிடம் அனிருத், 'ஹிப் பாப் தமிழன்' ஆதியின் பாடல்கள் மிகவும் பிரபலமாகும்.
ஆதியின் ‘இங்கிலீஷ் பேசினாலும் தமிழன் டா' வரிகள் எங்களைப் போன்றவர்களை பிரதிபலிப்பதாக உணர்கிறோம். ஆகவே அதையே TAYA வின் டேக்லைனாக தேர்ந்தெடுத்துள்ளளோம்.
ஒன்றிணைந்து உயர்வோம்
பெற்றோர்கள், பெரியவர்களை மதித்து, அவர்களுடைய அறிவுரையையும் ஏற்று நடப்பது என்பது தமிழர் பண்பாட்டின் முக்கிய அம்சமாகும். தமிழ் இளைஞர்களாகிய தாங்களும் அதையே பின்பற்றி, ஏனைய தமிழ் அமைப்புகளுடனும் சமூகப் பெரியவர்களுடனும் இணைந்து செயல்பட விரும்புகிறோம் என்று TAYA வின் Founder கணபத் ராமு தெரிவித்தார்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதே தங்கள் தாரக மந்திரம் என்று கூறும் ராமு, ஃபெட்னா, தமிழ் நாடு அறக்கட்டளை, உள்ளிட்ட அமெரிக்கத் தமிழ் அமைப்புகளின் ஆதரவை திரட்டி வருகிறார்.
கடந்த ஆண்டு டெக்சாஸ் அளவில் கல்லூரி மாணவர்களுக்கான மார்க்கெட்டிங் விருது பெற்றவர் ராமு என்பது குறிப்பிடத் தக்கது.
மொழி, பண்பாடு, பாரம்பரியம் காப்போம்
அமெரிக்கத் தமிழ் இளைஞர்களுக்கென்று ஒரு தேசிய மேடை, அனைத்துத் துறைகளிலும் தமிழ் இளைஞர்களின் வெற்றி போன்றவை TAYA வின் முக்கிய குறிக்கோள்களாகும். அதே சமயத்தில், நம் தமிழ் மொழி, பண்பாடு பாரம்பரியம் போன்றவற்றை , இளைஞர்களின் அன்றாட வாழ்க்கை முறையாக ஆக்குவதையும் TAYA தலையாய நோக்கமாக கொண்டுள்ளது," என்றார் ராமு.
அமெரிக்கத் தமிழ் இளைஞர்கள் களத்தில் இறங்கி விட்டார்கள். அடுத்த தலைமுறையிலும் தமிழர்களின் உலக சாதனை தொடரட்டும்!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications