அதிபர் ஒபாமாவைக் கொல்ல உறுதிமொழி எடுத்த 3 வெளிநாட்டவர்கள் நியூயார்க்கில் கைது!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைய முயற்சி செய்த மூன்று வெளிநாட்டவர்களை அந்நாட்டு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை கொலை செய்வோம் என்ற உறுதிமொழி, ஒரு இணையதளத்தில் உஸ்பெக் மொழியில் வெளியானது. அதனைத் தொடர்ந்து அப்போஸ்டை செய்தவர்களைக் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

New York residents arrested over IS extremist plot

அப்போது, நியூயார்க் நகரின் புரூக்ளின் பகுதியில் மூன்று வெளிநாட்டவர் ஐ.எஸ். இயக்கத்தில் சேர சிரியா செல்ல முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அம்மூன்று வெளிநாட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அப்துராசுல் ஜுராபோவ் (வயது 24), அப்ரோர் ஹபிபோவ் (வயது 30), ஆகியோர் உஸ்பெகிஸ்தான் நகரை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. மற்றொருவர் அஹ்ரோர் சைதாக்மேதோவ் (வயது 19) கஜகஸ்தானை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு நிதிஉதவி வழங்குவதற்கும் அவர்கள் சதிதிட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போலீசார் கைது செய்த போது, அவர்களில் இரண்டு பேர், ‘எங்களை சிரியாவிற்கு பயணம் செய்ய அனுமதிக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவோம்' என்று நியூயார்க் போலீசார் மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரியை மிரட்டியுள்ளனர்.

தொடர்ந்து அவர்களிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+