நியூசிலாந்து சூப்பர் மார்க்கெட்டில் 6 பேருக்கு சரமாரி கத்திக்குத்து: ஐஎஸ்.ஐஎஸ் தீவிரவாதி சுட்டுக்கொலை
கேப்டவுன்: நியூசிலாந்தில் ஐஎஸ் அமைப்பால் உந்தப்பட்டு மக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
நியூசிலாந்தில் ஆக்லாந்து அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கு உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளே புகுந்த இளைஞர் ஒருவர் கத்திகள் விற்கும் பகுதிக்கு சென்று, அங்கு இருந்து ஒரு புதிய கத்தியை எடுத்து மக்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளார்.

ஷாப்பிங் காம்ப்ளக்சில் இருந்த மக்களை சரமாரியாக குத்தி இருக்கிறார். இதில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஆனால் இந்த கத்தி குத்தில் யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.
இவர் மக்கள் மீது தாக்குதல் நடத்தி சரியாக ஒரு நிமிடத்தில் அங்கிருந்த பாதுகாவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தி இவரை சுட்டுக்கொன்றனர். போலீசார் துரிதமாக செயல்பட்டு அந்த தீவிரவாதியை கொன்றனர். இதனால் அங்கு மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பேட்டி அளித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்ட்ரென், இந்த சம்பவம் எனக்கு அதிர்ச்சி அளித்தது. தீவிரவாதியை துரிதமாக செயல்பட்டு பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
சுட்டுக்கொல்லப்பட்ட நபர் குறித்து அதிகம் என்னால் பேச முடியாது. அவர் இலங்கையை சேர்ந்தவர். கடந்த 2011ல் நியூசிலாந்தில் குடியேறி இருக்கிறார். அவர் ஐஎஸ் அமைப்பால் உந்தப்பட்டு இந்த தாக்குதலை நடத்தி உள்ளார்.
காவலர்கள் துரிதமாக செயல்பட்டதால் இதில் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்று விசாரிக்கப்படும். கொல்லப்பட்ட நபர் தேடப்பட்டு வந்த தீவிரவாதி என்பது குறிப்பிடத்தக்கது என்று, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்ட்ரென் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications