தூங்காமல் 86 மணிநேரத்தில் 500 கிமீ ஓடி நியூசிலாந்து பெண் புதிய சாதனை
Subscribe to Oneindia Tamil
ஆக்லேண்ட்: நியூசிலாந்தைச் சேர்ந்த 47 வயது பெண் ஒருவர் தூங்காமல் 86 மணிநேரத்தில் 500 கிமீ தூரம் ஓடி புதிய சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்தின் வாய்கடோ பகுதியைச் சேர்ந்தவர் கிம் ஆலன்(47). நான்கு குழந்தைகளின் தாய். அவர் கடந்த வியாழக்கிழை காலை 6 மணிக்கு நியூசிலாந்தின் பெரிய நகரமான ஆக்லேண்டில் இருந்து ஓடத் துவங்கினார். அவர் தொடர்ந்து 86 மணிநேரம் தூங்காமல் ஓடி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.35 மணிக்கு 500 கிமீ தூரத்தை கடந்துள்ளார். இதன் மூலம் தூங்காமல் அதிக தூரம் ஓடிய பெண் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த பாம் ரீட் என்ற பெண் கடந்த 2005ம் ஆண்டில் 80 மணிநேரத்தில் 486 கிமீ ஓடியது தான் உலக சாதனையாக இருந்தது.
கிம் நல்ல காரியத்திற்கு நிதி திரட்டவே இவ்வாறு தூங்காமல் ஓடினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications