குட்டிப் பாப்பா கக்கா போனாலும் பரவாயில்லை.. விடாமல் கிளிக்கிய அனா!
பிறந்த குழந்தையை புகைப்படம் எடுக்கும் போது கிடைக்கும் அனுபவங்கள் என்று ஒரு போட்டோஷுட் பதிவை பிரபல புகைப்படக் கலைஞர் அனா பிராட் போட்டிருந்த வீடியோ வைரலானது.
கலிஃபோர்னியா : பிறந்த குழந்தையை வைத்து படம்பிடிக்கும் போது ஏற்படும் வித்தியாசமான அனுபவங்கள் என்று பிரபல புகைப்படக் கலைஞர் அனா பிராட் வெளியிட்டிருந்த வீடியோ 2 லட்சம் லைக்ஸ்களை அள்ளியது.
இணையதள தேடல் பக்கங்களில் நாம் எளிதில் எடுத்து வாழ்த்துச் செய்திக்கோ, தகவல் பரிமாற்றத்தக்கோ பயன்படுத்தும் புகைப்படங்களை எடுப்பதில் சிறந்த கலைஞர் அனா பிராட். பெண்களின் பிரத்யேக பிரசவகால புகைப்படங்கள் மற்றும் பிறந்த குழந்தையின் புகைப்படங்களை எடுப்பதில் முன்னணி கலைஞர் அனா.

ஆர்வம் காட்டும் பெற்றோர்
வாழ்வு முழுவதையும் சந்தோஷம், ஆச்சரியம், படபடப்பு என்று பல நினைவலைகளை ஏற்படுத்தி வாழ்விற்கான அர்த்தம் கொடுக்கும் மழலையுடன் முதல் புகைப்படத்தை எடுத்துக் கொள்வதற்கு அயல்நாட்டினர் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த மாதம் பிரசவித்த தாய் ஒருவர் தன்னுடைய பிறந்த குழந்தையுடன் புகைப்படம் எடுக்க விரும்பியுள்ளார். இதனால் தாயின் கையில் தவழும் குழந்தையை புகைப்படம் எடுத்துள்ளார் அனா.

சேட்டை செய்த சுட்டி
உலகம் புரியாமல் எந்தக் கவலையும் இல்லாமல் அம்மா கையில் இதமான அரவணைப்பில் தூங்கும் குழந்தை, சரியாக போட்டோவை கிளிக் செய்யும் நேரத்தில் மூச்சா போய்விட்டது. ஆனாலும் அம்மா அதே உடையில் நின்று மூச்சாவை துடைத்துவிட்டு மறுபடியும் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

விடாமல் எடுத்த போட்டோ
கொஞ்ச நேரத்தில் செல்லக்குட்டி கக்காவையும் பீய்ச்சி அடிக்க எல்லோரும் ஷாக்காகி விட்டனர். என்றாலும் விடாமல் போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளனர்.
பறக்கும் லைக்ஸ்
பிறந்த குழந்தையை வைத்து போட்டோ எடுக்கும் போது என்னவெல்லாம் சேட்டை செய்கிறார்கள் என்று அனா வெளியிட்டிருந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏறத்தாழ 2 லட்சம் பேர் இந்த வீடியோவிற்கு லைக்ஸ்களை தட்டி விட்டுள்ளனர். நீங்களும் அந்த வீடியோவை பார்த்து மகிழுங்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications