எல்லை ஆக்கிரமிப்பு விவகாரம்- மோடியின் குற்றச்சாட்டுக்கு சீனா பதில்

குஜராத் மாநில முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திரமோடி, அருணாசலபிரதேசத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அம்மாநிலத்தை கைப்பற்றத் துடிக்கும் சீனாவை எச்சரித்தார்.
மேலும் இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேசத்தை எந்த சக்தியாலும் பறிக்கும் வல்லமை உலகில் எந்த ஒருநாட்டிடமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், இக்குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறுகையில், சீனா, நாடு பிடிக்கும் கொள்கையை பின்பற்றுவதாக குறிப்பிட்டு இருக்கிறார். பிற நாடுகளின் ஒரு அங்குல நிலத்தை கைப்பற்றுவதற்கு கூட சீனா போர் தொடுத்தது இல்லை.
எல்லையில் கடந்த பல ஆண்டுகளாக ராணுவ மோதல்கள் நடந்தது இல்லை. எல்லையில் அமைதியை கட்டிக்காக்கும் திறன் எங்களுக்கு உண்டு என்பதற்கு இதுவே சாட்சி.
இது, வருங்காலத்தில் இருதரப்பு உறவு மேம்பாட்டுக்கு நல்லது. இது, இருநாட்டுக்கு மட்டுமின்றி, இந்த ஒட்டு மொத்த பிராந்தியத்துக்கும் நல்லது.
இந்தியாவுடன் எல்லை பிரச்சினை இருப்பது உண்மைதான். அந்த பிரச்சினையை மட்டுமின்றி, எல்லா பிரச்சினைகளையும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையே சீனா விரும்புகிறது. இதற்காக இரு நாடுகளும் கடுமையாக பாடுபட்டு வருகின்றன. விரைவில் இப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று கருதுகிறோம் என்றார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications