Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்க அதிபர் மேடம் ஹிலாரி..! தலைப்பு செய்தியுடன் வார இதழ் ரெடி #ElectionDay

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல், நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிலையில், ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றதை போன்ற செய்திகளுடன் விற்பனைக்கு இப்போதே ரெடியாக உள்ள வார இதழ் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'நியூஸ்வீக்' என்ற வார இதழ் "Madam President" என்ற தலைப்பில் ஹிலாரியின் அட்டைப்படத்தோடு அச்சிடப்பட்டு ரெடியாக உள்ளதாம். இதுகுறித்து அந்த நாட்டு சோஷியல் மீடியாக்களில் வைரலாக தகவல் பரவியது. தேர்தல் முடிவுகளை ஜனநாயகத்திற்கு புறம்பாக எப்படி ஒரு பத்திரிகை தீர்மானிக்க முடியும் என்ற சர்ச்சை வெடித்துள்ளது.

இதையடுத்து வார இதழ் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ஹிலாரி மட்டுமின்றி, டிரம்ப் வெற்றி பெற்றதை போன்ற அட்டைப்படத்தோடும் புத்தகத்தை ரெடியாக வைத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. போட்டியாளர்களை முந்தி செய்தி தர வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடாம். நாளை ரிசல்ட் வெளியானதும், அதற்கேற்ப தங்கள் வார இதழ் முன்கூட்டியே ரெடியாக வைத்திருக்கும் இரண்டில் ஒரு புத்தகத்தை கடைகளுக்கு அனுப்ப திட்டமாம்.

ஹிலாரி ஜெயித்தால் அந்த அட்டைப்பட புத்தகத்தையும், டிரம்ப் ஜெயித்தால் அந்த அட்டைப்படம் கொண்ட புத்தகமும் அனுப்பி வைக்கப்படும். மற்றொரு செட் புத்தகம் வீணாகும். இதுதான் வியாாபர தந்திரமாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+