நியூயார்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து... 12 பேர் படுகாயம்!
நியூயார்க்கின் பிரான்க்ஸில் 12 அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நியூயார்க் : பிரான்க்ஸில் உள்ள 12 அடுக்கு மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீயை அணைக்கும் பணியில் 200 தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நியூயார்க்கின் வேன் நெஸ்ட்டில் உள்ள பிரான்க்ஸ் விலங்குகள் பூங்கா மிகவும் பிரபலமானது. இந்த பூங்காவிற்கு அருகில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்நாட்டு நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் பயங்கர தீ பிடித்து எரிந்துள்ளது.
பிரான்க்ஸ் கட்டிடம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குடியிருப்பு பகுதி 4 அடுக்கு மாடிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் சுமார் 12 குடியிருப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிகாலை தீ விபத்து
அதிகாலை நேரத்தில் இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனையடுத்து நியூயார்க் சிட்டியின் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்த சில நிமிடங்களில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீயை அணைக்க போராட்டம்
எனினும் அதிகாலை நேரம் என்பதோடு கரும்புகை அதிக அளவில் இருந்ததாலும் தீயை அணைப்பது சிரமமாக இருந்துள்ளது. சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்துள்ளனர். முதல் தளத்தில் இருந்த மரச்சாமான் கடையில் இருந்து தீ பற்றி எரிந்து மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளதாக தெரிகிறது.

முதல்கட்ட தகவல்
இந்த தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட 19 தீயணைப்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கட்டிடத்தில் இருந்தவர்கள் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டதாக என்ற தகவல் இல்லை, எனினும் சுமார் 12 பேர் வரை கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகியிருப்பதாக சர்வதேச ஊடக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
|
அடுத்தடுத்த தீ விபத்துகள்
அண்மையில் நியூயார்க் நகரையே உலுக்கி போட்ட ஒரு தீ விபத்து சம்பவம் நடந்தது. 3 வயது குழந்தை ஒன்று ஸ்டவ் வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தீ விபத்து 12 பேரின் உயிரை பலிவாங்கிய நிலையில் மீண்டும் ஒரு விபத்து நடந்திருப்பது அந்தப் பகுதியினரை அச்சமடைய வைத்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications