Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிமிஷா பிரியா வழக்கு! உள்ளே வரும் நட்பு நாடுகள்.. சவுதி, ஈரானை வைத்து காய்களை நகர்த்தும் இந்தியா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏமன் நாட்டில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பத்திரமாக மீட்டு வரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே நிமிஷா பிரியா விவகாரத்தில் எடுக்கப்பட்டு வரும் புதிய நடவடிக்கைகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் சில முக்கியமான கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா இப்போது ஏமன் சிறைகளில் இருக்கிறார். ஏமனைச் சேர்ந்த ஒரு இளைஞரை கொலை செய்த வழக்கில் அவர் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார். கடந்த ஜூலை 16ம் தேதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் அது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

Nimisha Priya Case India Engages Yemen Authorities to Save Kerala Nurse from Execution

நிமிஷா பிரியா

மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நிரந்தரமாக அங்கிருந்து மீட்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே நிமிஷா பிரியாவை காப்பாற்ற எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

அதாவது இந்த விவகாரம் தொடர்பாக ஏமன் தலைநகர் சனாவில் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அந்தப் பிராந்தியத்தில் உள்ள சில நட்பு நாடுகளின் அரசுகள் உடனும் இந்திய அரசு தொடர்பு கொண்டு இருப்பதாகவும் நிமிஷா பிரியாவின் விடுதலைக்குத் தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை தகவல்

ஏமன் தலைநகரைக் கட்டுப்படுத்தும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மட்டுமின்றி, சவுதி அரேபியா, ஈரான் நாடுகளுடனும் இது தொடர்பாக இந்தியா பேசி வருகிறதாம். ஹவுத்திகளிடையே செல்வாக்கு உள்ள அண்டை நாடுகளின் அதிகாரிகளுடனும் இந்தியா தொடர்பில் உள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்றும் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

பேச்சுவார்த்தை

அவர் மேலும் கூறுகையில், "குடும்பத்திற்கு உதவ ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளோம். அவ்வப்போது அவரது தாயார் நிமிஷா பிரியாவை பார்க்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் இந்த விஷயத்தைத் தீர்க்க உள்ளூர் அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். மரண தண்டனை விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்குக் கூடுதல் நேரத்தையும் கோரி வருகிறோம்" என்றார்.

நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இருப்பினும், அது கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த மதத் தலைவர் காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியாரின் தலையீடும் இதற்கு முக்கிய காரணம் எனச் சொல்லப்பட்டது. இது குறித்துக் கேட்டபோது, சம்பந்தப்பட்ட அந்த நபரின் பங்கு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஜெய்ஸ்வால் கூறினார்.

நட்பு நாடுகள்

அவர் மேலும் கூறுகையில், "ஏமனில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் ஜூலை 16ம் தேதி அவரது தண்டனையை ஒத்திவைத்துள்ளனர். நாங்கள் இந்த விஷயத்தைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து, சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குகிறோம். சில நட்பு நாடுகளுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்," என்று திரு. ஜெய்ஸ்வால் கூறினார்.

இந்த வழக்கில் சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் தான் பிராந்திய மையமாகச் செயல்பட்டு வருகிறது. மேலும், ஈரானும் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதமே ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் சையத் அப்பாஸ் அராக்ச்சி இது தொடர்பாக ஹவுத்திகளிடம் பேசியிருந்தார். இருப்பினும், அப்போதே இந்த விவகாரத்தில் நல்ல செய்தி எதுவும் வரவில்லை.

வழக்கின் பின்னணி

கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியா தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து கிளினிக் நடத்தி வந்துள்ளார். இருப்பினும், ஒரு கட்டத்தில் மஹ்தி தன்னை சித்திரவதை செய்ததாகவும், தனது பாஸ்போர்ட்டை பறித்துக்கொண்டதாகவும் குற்றம் சாட்டினார். 2017ல் மஹ்திக்கு மயக்க மருந்து கொடுத்து, பாஸ்போர்ட்டை எடுக்க முயன்றுள்ளார். அதில் மயக்க மருந்து ஓவர்டோஸ் ஆனதில் மஹ்தி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே நிமிஷா பிரியா கொலைக் குற்றச்சாட்டில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் 'இரத்தப் பணம்' கொடுத்து நிமிஷா பிரியாவை மன்னிக்குமாறு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. 2018 முதல் நிமிஷா பிரியா மரண தண்டனையை எதிர்கொண்டு வரும் நிலையில், இப்போது வரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அவரை மன்னிக்க ரெடியாக இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+