இதுக்குத் தாங்க பிளைட்லயும் ‘கண்டக்டர்’ வேணுங்கறது...
வாஷிங்டன்: அமெரிக்காவில் 9 வயது சிறுவன் ஒருவன் டிக்கெட் இல்லாமல் தனியாக 2000 கி.மீ. தூரம் விமானப் பயணம் செய்தது மக்களிடையே தேசத்தின் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்காங்கே தீவிரவாதிகள் விமானங்களைக் கடத்தி பயணிகளைக் கடத்தி அச்சுறுத்தல் கொடுத்து வரும் நிலையில், அமெரிக்காவில் எல்லாவித சோதனைகளில் இருந்தும் தப்பி கிட்டத்தட்ட 2000கிமீ தூரம் தனியாக பயணம் செய்துள்ளான் 9 வயது சிறுவன் ஒருவன்.
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட விமானப் பயணிகள் நாட்டின் பாதுகாப்பு குறித்து கலக்கமடைந்துள்ளனர்.

டெல்டா விமானம்....
சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் மின்னபோலிஸ் செயிண்ட்பால் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து லாஸ்வேகாஸ் செல்ல ஆயத்தமானது டெல்டா விமானம் ஒன்று.

பொய்....
விமானத்தில் 9 வயது சிறுவன் ஒருவன் தனியாக ஏறியுள்ளான். காலியாக இருந்த சீட்டில் அமர்ந்த அச்சிறுவனை, விமானப் பணியாளர்கள் விசாரித்த போது, ‘தன் பெற்றோர் பின் சீட்டில் அமர்ந்திருப்பதாகக் கூறியுள்ளான்.

அதிர்ச்சி....
சிறுவனது பேச்சை முதலில் நம்பிய ஊழியர்கள், விமானம் லாஸ்வேகாஸ் நகரத்தை நெருங்கும் போது எதேச்சையாக பயணிகள் லிஸ்டில் அச்சிறுவனின் பெயர் இல்லாததைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.

தீவிர விசாரணையில்....
அதனைத் தொடர்ந்து அச்சிறுவனிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அச்சிறுவன் தனிமையில் விமானத்தில் பயணம் செய்தது கண்டுபிடிக்கப் பட்டது. பின்னர், அச்சிறுவன் மீண்டும் பத்திரமாக மின்னபோலிஸ் அனுப்பி வைக்கப் பட்டான்.

சோதனைகளில் சிக்கவில்லை....
விமான நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்ததில் சிறுவன் அனைத்து வித பாதுகாப்பு சோதனைகளையும் மீறி விமானத்தை நோக்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்ததைக் கண்டு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

கேள்விக்குறியான பாதுகாப்பு...
9 வயது சிறுவன் அனைத்து வித சோதனைகளையும் மீறி விமானத்தில் தனிமையில் சுமார் 2000 கிமீ பயணம் செய்த தகவல் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications