For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க சென்ற நிர்மலா சீதாராமன்..சீனாவுடன் முக்கிய ஆலோசனை

Google Oneindia Tamil News

பிஷ்கெக்: கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கு சீன பிரதிநிதியுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

சீனா, கஜகஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஷாங்காய் கூட்டமைப்பு. இந்த அமைப்பின் மாநாடு சுழற்சி அடிப்படையில் நடப்பாண்டில் கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் நடைபெற்று வருகிறது.

Nirmala Sitharaman went to participate in the Shanghai Conference ..bilateral meet with China

3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க கிர்கிஸ்தான் சென்ற அமைச்சர் நிர்மலா சீதாராமன், சீனாவின் பிரதிநிதியான அந்நாட்டு ராணுவ அமைச்சரான வேய் ஃபெங்ஹேவை சந்தித்து பேசினார். மேலும் கிர்கிஸ்தான் ராணுவ தளபதி ரைம்பெர்டி டுய்ஷென்பியேவுடனும் ஆலோசனை நடத்தினார்.

இருவரையும் தனித்தனியாக சந்தித்த நிர்மலா சீதாராமன், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். குறிப்பாக பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது

வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக வேட்பு மனுதாக்கல் செய்ய குவிந்த விவசாயிகள்.. திடீர் போராட்டம் வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக வேட்பு மனுதாக்கல் செய்ய குவிந்த விவசாயிகள்.. திடீர் போராட்டம்

தெற்காசிய பிராந்தியத்தில் நிலவிவரும் பயங்கரவாத அச்சுறுத்தல், உள்நாட்டு பாதுகாப்பு, உளவுத்துறை பரிமாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

English summary
Union Minister Nirmala Sitharaman, who was in attendance at the Shanghai Cooperation Conference in Kyrgyzstan, was in the main advisory with the Chinese representative.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X