ஓமனில் உண்ண உணவு இன்றி, தங்க இடமின்றி சிக்கி தவிக்கும் தமிழர்கள் - ஏமாற்றிய ஏஜென்ட்

ஓமன் நாட்டுக்காக வேலைக்கு சென்ற தமிழர்கள் உண்ண உணவின்றி தங்க இடமின்றி தவித்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

ஓமன்: தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், திருச்சி, அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர் பணிக்காக ஓமன் நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்கே சம்பளம் கிடைக்காமல் நான்கு மாதங்களாக உண்ண உணவின்றி, தவித்து வருவதாக வாட்ஸ் அப் மூலம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக ஏஜெண்ட் மூலமாக ஓமன் நாட்டுக்கு சென்ற இவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லையாம். நாகராஜன் என்பவர் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

No Food, No Pay: Tamil Workers suffers in Oman

கடினமான வேலைகளை கொடுத்து சம்பளம் தராமல் ஏமாற்றுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து இந்திய தூதரகத்தில் புகார் தெரிவித்தும் அவர்கள் நிறுவனத்திற்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர் என்று புகார் கூறியுள்ளனர்.

கடந்த 4 மாதங்களாக உண்ண உணவின்றியும், தங்க இடமின்றியும் தவிப்பதாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளனர். தங்களை மத்திய அரசு மீட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+