கேரளாவிற்கு ரூ.700 கோடியா? நாங்க எப்ப சொன்னோம்.. ஐக்கிய அரபு அமீரகம் பல்டி!
கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் பணம் கொடுப்பதாக வெளியான தகவலை அந்நாட்டு தூதர் அகமது அல்பன்னா மறுத்துள்ளார்.
அபுதாபி: கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் பணம் கொடுப்பதாக வெளியான தகவலை அந்நாட்டு தூதர் அகமது அல்பன்னா மறுத்துள்ளார்.
கேரளாவில் வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பல மாநில அரசுகள் நிதி உதவி அளித்துள்ளது.
ஆனால் இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. ஆனாலும் கேரளாவில் மொத்தமாக இயல்புநிலை திரும்ப குறைந்தது 2500 கோடி ரூபாயாவது தேவைப்படும் என்று கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் உதவி
மத்திய அரசு இதுவரை 600 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. கேரளாவில் வெள்ளம் என்றவுடன், அரபு நாடுகள்தான் மிகவும் அதிகளவு உதவிகளை செய்தது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 700 கோடி கொடுப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து கேரளா மாநில முதல்வரும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

சிக்கல் எழுந்தது
ஐக்கிய அரபு அமீரகம் கொடுக்க இருக்கும் 700 கோடி ரூபாயை மத்திய அரசு இந்தியாவிற்குள் அனுமதிக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. இதற்கான சட்ட காரணங்கள் சொல்லப்பட்டது. நிதி உதவியை ஏற்க மாட்டோம் என்று இந்திய அரசு, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பதில் அளிக்க உள்ளது என்றும் கூறப்பட்டது. அதேபோல் வேறு வெளிநாடுகள் கொடுக்கும் பணத்தையும் ஏற்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.

700 கோடியா
இந்த நிலையில்தான் கேரளாவிற்கு பணம் கொடுப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று ஐக்கிய அரபு அமீரக தூதர் அகமது அல்பன்னா தெரிவித்துள்ளார். இதுவரை பணம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். 700 கோடி கொடுப்பதாக பரவிய தகவல் பொய்யானது என்று கூறியுள்ளார்.

விரைவில் முடிவெடுப்போம்
அதேபோல் கேரளா வெள்ளம் குறித்து விவாதம் நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். விரைவில் எவ்வளவு நிதி அளிக்க வேண்டும் என்று முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்து இருக்கிறார். சில கேரளா மாநில அதிகாரிகளுடன் இதுகுறித்து விரைவில் பேச உள்ளதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
-
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
கேரளாவில் மீண்டும் தலைதூக்கிய நிபா வைரஸ்.. தடுப்பூசி கூட இல்லையே.. வௌவால்கள் மூலம் பரவும் ஆபத்து! -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications