இந்த ராசிக்காரர்களுக்கு நோ வேலை.. கண்டிஷன் போட்ட நிறுவனம்.. அதுக்கு ஒரு காரணம் வேற! மிரண்ட இளைஞர்கள்
பெய்ஜிங்: எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் பல இடங்களில் மூட நம்பிக்கைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். அப்படி தான் இங்கே ஒரு நிறுவனம் குறிப்பிட்ட ராசியைச் சேர்ந்தவர்கள் தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கக் கூடாது என அறிவித்துள்ளனர். மேலும், அதற்கு சில வினோதமான காரணங்களையும் கூட அவர்கள் கூறியுள்ளனர்.
பொதுவாக நம்மில் பெரும்பாலானோருக்குச் சிறு சிறு மூட நம்பிக்கைகள் இருக்கும். உதாரணத்திற்கு சச்சின் பேட் கட்டும் போது எப்போதும் முதலில் இடது காலிற்கான பேடை தான் கட்டுவாராம். இதுபோல நம்மில் பலருக்கும் சில நம்பிக்கைகள் இருக்கும்.

இவை மற்றவர்களுக்கோ அல்லது நமக்கோ சிக்கலை ஏற்படுத்தாத வரை இதை நாம் பாலோ செய்யலாம். ஆனால், இதனால் நாம் சார்ந்து இருப்போருக்குப் பிரச்சினை என்றால் அதை நிச்சயம் தவிர்க்கவே வேண்டும்.
மூட நம்பிக்கைகள்: ஆனால், இங்கே ஒரு பிரபல நிறுவனம் மூட நம்பிக்கைகளை அடுத்த கட்டத்திற்கே எடுத்துச் சென்றுவிட்டார்கள். அதாவது துரதிர்ஷ்டத்திற்குப் பயந்து சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் குறிப்பிட்ட ராசியில் பிறந்தவர்கள் தங்கள் நிறுவனத்தில் வேலை கேட்டே விண்ணப்பிக்கக் கூடாது எனத் தடை விதித்துள்ளது. இந்த நிறுவனம் எந்தளவுக்கு மூடநம்பிக்கைகளைக் கொண்டுள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.
சீனா என்ன தான் பொருளாதாரத்தில் மிகப் பெரிய நாடாக இருந்தாலும் மூடநம்பிக்கைகளில் நமது நாட்டை விட மிக மோசமாக இருக்கிறது. அங்குள்ள பல பெருநிறுவன உலகளவில் விரிவடைந்து இருந்தாலும் சில குறிப்பிட்ட தேதிகள் அல்லது குறிப்பிட்ட நிறங்களைத் தவிர்ப்பது போன்ற மூடநம்பிக்கைகளைப் பின்பற்றும்.
சீன நிறுவனம்: ஆனால் தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள சன்க்ஸிங் ட்ரான்ஸ்போர்ட்டேஷன் நிறுவனம் மூடநம்பிக்கையில் அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டது எனச் சொல்லலாம். வேலைக்கு ஆட்களை எடுக்க அவர்கள் வெளியிட்ட கொள்கையே இதைக் காட்டுவதாக இருக்கிறது. அதாவது சீன ஆண்டான நாய் ஆண்டில் பிறந்த யாரும் தங்கள் நிறுவனத்தில் வேலை கோரி விண்ணப்பிக்கக் கூடாது என்று அறிவித்துள்ளனர்.
நாய் ஆண்டு: சீனாவில் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒவ்வொரு விலங்கின் பெயரைக் குறிப்பிட்டே அழைப்பார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சுழற்சி இருக்கும். அதன்படி நாய்கள் ஆண்டு என்பது 1922, 1934, 1946, 1958, 1970, 1982, 1994, 2006, 2018 ஆண்டுகளைக் குறிக்கும். இந்த ஆண்டுகளில் பிறந்தோர் விண்ணப்பிக்கக்கூடாது என அறிவித்துள்ளது.
"முதலாளிகள் விற்பனைக்கு.." விலை கூட ரொம்ப கம்மி.. சீனாவில் வினோதமான டிரெண்ட்! ஓ இதுதான் மேட்டரா!
வினோத காரணம்: அந்த நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருப்பவர் டிராகன் ராசியைக் கொண்டவராம்.. அவருக்கும் நாய் ராசி கொண்டவர்களுக்கும் ஆகாதாம். நாய் ராசி நிறுவனத்திற்கு துருதிஷ்டத்தை கொண்டு வருவார்கள் என்று சொல்லியே தடை விதித்துள்ளனர். சமீபத்தில் அங்கே எழுத்தர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பில் கூட நாய் ராசியில் பிறந்தோர் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் எந்தளவுக்கு மூடநம்பிக்கையைப் பின்பற்றுகிறது என்பதற்கு இதுவே ஒரு சாட்சியாக இருக்கிறது. .
இருப்பினும், தங்கள் முடிவை நியாயப்படுத்தும் அந்த நிறுவன ஊழியர்கள், "ஒவ்வொரு ராசியும் உலோகம், மரம், நீர், நெருப்பு மற்றும் பூமி ஆகிய 5 கட்டங்களில் ஒன்றில் வரும். இதில் டிராகன் தண்ணீர் பிரிவில் வரும். அதேநேரம் நாய் ராசி நெருப்பு பிரிவில் வரும். எனவே, இரு தரப்பும் இணைந்து எதையுமே செய்ய முடியாது. இதன் காரணமாகவே நாங்கள் இந்த பாலிசியை வைத்துள்ளோம். நாய் ராசியாக இல்லை என்றால் போதும்.. தகுதியில் கூட சமரசம் செய்து கொள்வோம்" என்கிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications