For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"மிஸ்டர் பீன்" ரோவன் அட்கின்சனைக் "கொன்று" வைரஸைப் பரப்பிய ஹேக்கர் கும்பல்!

Google Oneindia Tamil News

லண்டன்: மிஸ்டர் பீன் புகழ் ரோவன் அட்கின்சன் இறந்து விட்டதாக பரவிய வதந்தியால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இது வதந்தி என்று பின்னர் தெரிய வந்து அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

ரோவன் குறித்து வதந்தி பரவுவது இது முதல் முறையல்ல. 3வது முறையாகும். 63 வயதாகும் இங்கிலாந்தைச் சேர்ந்த ரோவன் அட்கின்சன், மிஸ்டர் பீன் பாத்திரம் மூலம் உலகப் புகழ் பெற்றவர். உலகெங்கும் மிஸ்டர் பீன் பாத்திரத்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

No, Mr Bean is alive

இதற்கு முன்பு பலமுறை ரோவன் குறித்து வதந்திகள் பரவியுள்ளன என்றாலும் கூட இப்போது பரவியதற்கு இன்னொரு வில்லங்கமான காரணம் உண்டு. அதாவது கம்ப்யூட்டர் வைரஸைப் பரப்புவதற்காக இந்த புரளியைக் கிளப்பி விட்டுள்ளனராம். இந்த செய்தி பரவியதும் பலரும் வந்து இணையதளத்தில் தேடுவர் அதன் மூலம் அந்த வைரஸை பரப்புவதே இவர்களின் நோக்கமாகும்.

எப்படி என்றால்.. வைரஸ் பரப்பிய கும்பல் ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தது. அதில், ரோவன் அட்கின்சன் கார் விபத்தில் சிக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இதை கிளிக் செய்து பார்க்குமாறு அது கூறியிருந்தது. அந்த வீடியோவை பிளே செய்தால் வைரஸ் கம்ப்யூட்டரைத் தாக்குவது போல செய்திருந்தனர். இந்த வீடியோவை கிளிக் செய்தவர்களின் கம்ப்யூட்டர்களில் ஊடுறுவிய ஹேக்கர் கும்பல் அதில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கிரெடிட் கார்டு விவரம் உள்ளிட்டவற்றை திருடியுள்ளனர்.

இதுபோல பிரபலங்கள் இறந்து விட்டதாக கூறி ஏதாவது வந்தால் குறிப்பாக வீடியோ அல்லது ஆடியோவை கிளிக் செய்யுமாறு கூறி தகவல் வந்தால் அதைச் செய்யாதீர்கள் என்று ஆன்டி வைரஸ் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

நல்லா கிளப்புறீங்கய்யா பீதியை!

English summary
There was a hoax that Mr bean fame Rowan Atkinson was killed in a car accident. But he is alive and this is a hoax spread by a hacking group.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X