இதை செய்யனும்.. இல்லாவிட்டால் முஸ்லிம்களை யாராலும் தடுக்க முடியாது! இஸ்ரேலுக்கு ஈரான் பகீர் மிரட்டல்
இஸ்ரேல்: காசாவில் இருந்து இஸ்ரேல் உடனடியாக வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு படைகள் ஒன்றிணைவதை யாராலும் தடுக்க முடியாது என ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இஸ்ரேலும், பாலஸ்தீனமும் அண்டை நாடுகளாகும். அடிக்கடி இருநாடுகளுக்கும் இடையேயும் மோதல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து முன்காலத்தில் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேல் வசம் இருந்தது. அதன்பிறகு அந்த பகுதி பாலஸ்தீனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து காசா பகுதியில் ஹமாஸ் எனும் அமைப்பு வேகமாக வளர்ந்தது. இந்த அமைப்பு இஸ்ரேலியர்களை காசாவுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் காசாவை கைப்பற்ற இஸ்ரேல் முயன்றது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
கடந்த 7 ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் தொடங்கி நடந்து வருகிறது.இன்றுடன் 11வது நாளாக போர் நடந்து வருகிறது. ஒட்டுமொத்த காசா நகரையும் கைப்பற்றும் நோக்கில் இஸ்ரேல் தாக்குகிறது. தற்போது வரை இருதரப்பையும் சேர்த்து 3 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் 10,888க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் ஈரானின் உச்ச அதிகாரம் பெற்ற தலைவரான அயதுல்லா அலி கமேனி இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். காசாவில் இஸ்ரேல் போர் குற்றங்கள் செய்தால் முஸ்லிம்களையும், இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பு படைகளையும் யாராலும் தடுத்து கட்டுப்படுத்த முடியாது என அவர் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளதாவது:
பாலஸ்தீன மக்களுக்கு எதிரான சியோனிச ஆட்சியின் (பலாஸ்தீனத்தில் யூதர்களுக்கு நாடு ஏற்படுத்தும் இயக்கம் அல்லது இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலிய ஆதரவாளர்களை குறிக்கும் சொல்)குற்றங்கள்தொடர்ந்தால் முஸ்லிம்கள் மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு சக்திகளை யாராலும் எதிர்கொள்ள முடியாத சூழல் ஏற்படும். இதனால் காசா மீதான குண்டுவீச்சு சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மேலும் காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் செய்த குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
ஈரான் என்பது 1979 காலக்கட்டத்தில் இருந்தே பாலஸ்தீனத்துக்கும், காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறது. மேலும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவியும், ஆயுத சப்ளையும் வழங்கி வருகிறது. தற்போதும் கூட ஹமாஸ் தீவிரவாதிகள்-இஸ்ரேல் உடனான யுத்தத்தில் தொடர்ந்து ஈரான் ஹமாஸ் அமைப்பின் பக்கமே இருந்து வருகிறது. அதேபோல் லெபனான் நாட்டில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுத குழுவும் இஸ்ரேலுக்கு எதிராக போரிட தயாராகி வருகிறது. இதனால் மோதல் வலுக்கும் சூழல் உருவாகி உள்ளது.
-
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
மாட்டிக்கிட்ட பங்கு.. டிரம்ப்-ன் கழுத்தை நெறிக்கும் ஈரான்.. தேவையில்லாமல் இறங்கிவிட்டோம் புலம்பும் USA!! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன் -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications