For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டதற்கான அடையாளம் எதுவும் இல்லை" பகீர் கிளப்பும் தாலிபான்

Google Oneindia Tamil News

காபூல்: டிரோன் தாக்குதல் மூலம் அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரியை கொன்றதாக அமெரிக்கா கூறியநிலையில், 'அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டதற்கான அடையாளம் எதுவும் இல்லை' என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிகப்பெரிய தீவிரவாதியாக கருதப்பட்ட அல் கொய்தாவின் தலைவரான ஒசாமா பின் லேடன் கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலை நடத்தினார்.

இதனால் கடும் கோபம் அடைந்த அமெரிக்கா அவரை பாகிஸ்தான் நாட்டில் ஸ்கெட்ச் போட்டு சுட்டு கொன்றது.

கட்டிடக்கலைஞர்.. மருத்துவர்..பின்லேடனின் தோழர் - யார் இந்த அய்மன் அல்-ஜவாஹிரி கட்டிடக்கலைஞர்.. மருத்துவர்..பின்லேடனின் தோழர் - யார் இந்த அய்மன் அல்-ஜவாஹிரி

 மிகப்பெரிய தீவிரவாதி

மிகப்பெரிய தீவிரவாதி

இதைத்தொடர்ந்து அல் கொய்தா தலைவராக கடந்த 2011-ம் ஆண்டு முதல் அய்மான் அல் ஜவாஹிரி இருந்து வந்தார். அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்காவின் நிதி தலைநகரான நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தில் தாக்குதல் நடத்தியதில் மிக முக்கியமானவராக இருந்தார். உலகம் முழுவதும் பெரிதான இந்த சம்பவத்தை அடுத்து அமெரிக்கா அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரியை பயங்கரவாத பட்டியலில் சேர்த்து அவரை கொல்வதற்கும் திட்டம் தீட்டி வந்தது. இதற்காக அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பு அவரை ரகசியமாக கண்காணித்து வந்தது.

 டிரோன் மூலம் தாக்குதல்

டிரோன் மூலம் தாக்குதல்

தொடர்ந்து அவரை கொல்வதற்கு அமெரிக்கா தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வந்தது. இதற்காக அய்மான் அல் ஜவாஹிரியின் செயல்களை கண்காணித்து வந்த சிஐஏ உளவு அமைப்பு, பல முறை அவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டது. எனினும் அவர் அதில் சிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்த அய்மான் அல் ஜவாஹிரியை நேற்று அமெரிக்கா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இருந்து அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.

 மவுனம் காத்து வந்த தாலிபான்கள்

மவுனம் காத்து வந்த தாலிபான்கள்

அல்கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாகிரி, அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி தாலிபான்கள் மத்தியிலும் எதிரொலித்தது. இதற்கு தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலுக்குள் சென்று அமெரிக்கா டிரோன் தாக்குதலை நடத்தி அய்மான் அல் ஜவாகிரியை கொன்றதற்கு முதலில் கண்டனம் தெரிவித்து இருந்தனர். எனினும் இவ்விகாரத்தில் அதிகம் பேசாமல் தாலிபான்கள் தொடர்ந்து மவுனம் காத்து வருகின்றனர்.

 தடயம் எதுவும் இல்லை

தடயம் எதுவும் இல்லை

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அவையில் தாலிபான்களின் பிரதிநிதியாக உள்ள சுஹைல் ஷாகீன் கத்தார் தலைநகர் தோஹாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "அமெரிக்கா சொல்வதின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் பொது வெளியில் பகிரப்படும். ஆனால், அய்மான் அல் ஜவாஹிரி விவகாரத்தில் அமெரிக்கா கூறுவது பற்றி ஆப்கானிஸ்தான் அரசுக்கோ அதன் தலைமையோ எதுவும் அறிந்து இருக்கவில்லை. அதற்கான தடயம் எதுவும் இல்லை" என்றார்.

Recommended Video

    America-வின் Secret ஆயுதம்! வீட்டு Balcony-யிலேயே தீவிரவாதியை துண்டாடிய பயங்கர Missile *Defence
     குழப்பம்

    குழப்பம்

    அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்காவின் டிரான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறுவது பற்றி தலிபான்கள் விசாரித்து வருவதாக தாலிபான் செய்தி தொடர்பாளர் இன்று தெரிவித்தார். மேலும் அல்கொய்தா தலைவர் காபூலில் இருந்தது தாலிபான் தலைமைக்கு தெரியாது எனவும் மறைமுகமாக தனது பேட்டியின் போது சுட்டிக்காட்டும் வகையில் பேசினார். டிரோன் தாக்குதல் மூலம் அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரியை கொன்றதாக அமெரிக்கா கூறியநிலையில், 'அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டதற்கான அடையாளம் எதுவும் இல்லை' என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    While the United States claimed to have killed al-Qaeda leader Ayman al-Zawahiri through a drone strike, the Taliban said there was no sign of the al-Qaeda leader's death, causing confusion.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X