வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு.. யார் இவர்கள்? பின்னணி இதுதான்
வாஷிங்டன்: 2025ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஒமர் எம். யாகி ஆகியோருக்கு இந்த பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோரை பாராட்டும் வகையில் நோபல் பரிசு என்பது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்வீடன் நாட்டின் சயின்டிஸ்ட் ஆல்ஃபிரட் நோபலின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அவரது பெயரில் இந்த பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட 6 துறைகளை மையபப்படுத்தி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நோபல் பரிசை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் சார்பில் வழங்கப்படும். இந்நிலையில் தான் 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 3 பேருக்கு நேபால் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியல் துறையில் சாதித்ததற்காக சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஒமர் எம். யாகி ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 8, 2025
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2025 #NobelPrize in Chemistry to Susumu Kitagawa, Richard Robson and Omar M. Yaghi “for the development of metal–organic frameworks.” pic.twitter.com/IRrV57ObD6
இவர்கள் 3 பேருக்கும் 11 மில்லியன் ஸ்வீடிஷ் கிரவுன் பரிசுத்தொகையாக வழங்கப்படும். அதாவது இந்திய மதிப்பில் பரிசுத்தொகை ரூ.10 கோடியாகம். இந்த பணத்தை மேற்கூறிய 3 பேரும் பகிர்ந்து நோபல் பரிசு பெற உள்ளனர்.உலோக - கரிமம் சார்ந்த ஆய்வுக்காக (Metal-Organic frameworks) இவர்கள் 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுசுமு கிடகாவா ஜப்பானை சேர்ந்தவர். ஜப்பானில் உள்ள கியோடோ நகரில் 1951ம் ஆண்டு பிறந்தவர். வேதியியலில் பிஎச்டி படிப்பை முடித்த இவர் ஜப்பானின் கியோடா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
அதேபோல் ரிச்சர்ட் ராப்சன் பிரிட்டனை சேர்ந்தவர். இவர் 1937 ம் ஆண்டு பிரிட்டனில் உள்ள குல்ஸ்பர்ன் நகரில் பிறந்தார். பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் படித்து முடித்தவர். தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
ஓமர் எம் யாகி ஜோர்டான் நாட்டில் 1965ம் ஆண்டில் பிறந்தார். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். மேலம் கவ்லி எனர்ஜி நானோ சயின்ஸ் இன்ஸ்ட்டியூட்டின் நிறுவன இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications