வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு.. இவர்கள் யார்? சாதித்தது என்ன தெரியுமா?
ஸ்டாக்ஹோம்: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டேவிட் பேக்கர், இங்கிலாந்தின் டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகிய 3 பேருக்கும் 'புரதம்' சார்ந்த ஆராய்ச்சிக்கான இந்த நோபல் பரிசு என்பது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோரை பாராட்டும் வகையில் நோபல் பரிசு என்பது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நேபால் பரிசு என்பது ஸ்வீடன் சயின்டிஸ்ட் ஆல்ஃபிரட் நோபலின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நோபல் பரிசு என்பது ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் சார்பில் வழங்கப்படும்.
இந்நிலையில் தான் 2024ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேதியியலுக்கான நோபல் பரிசு என்பது விஞ்ஞானிகள் டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் உள்ளிட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் டேவிட் பேக்கர் அமெரிக்காவை சேர்ந்தவர். டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள்.இவர்கள் 3 பேரும் புரதம் சார்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வெற்றி கண்ட நிலையில் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்த ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. விக்டர் அம்ரோஸ் மற்றும் க்ரே ருவ்குன் ஆகியோருக்கும், நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜான் ஜே ஹாப்ஃபீல்ட் மற்றும் கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழக பேராசிரியர் ஜெஃரி இ ஹிண்டன் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டது. அந்த வரிசையில் இன்று இன்று 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும். அதன்பிறகு நாளை மறுநாள் அமைதிக்கான நோபல் பரிசும், அதன்பிறகு அக்டேபர் 14ம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படும். பிறகு மறைந்த விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 1ம் தேதி அனைவருக்கும் நோபல் பரிசு என்பது வழங்கப்படும். அப்போது நோபல் பரிசு பெறுவோருக்கு 10 லட்சம் அமெரிக்கா டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.8.30 கோடி) பரிசுத் தொகையாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications