ஈரானை எப்படி தாக்கலாம்? கிம்ஜாங் உன் எடுத்த முடிவு.. இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கிய வடகொரியா
பியாங்யாங்: இஸ்ரேலும், ஈரானும் கடுமையாக மோதி வருகின்றன. இந்நிலையில் தான் அதிபர் கிம்ஜாங் உன் ஆளும் வடகொரியா இஸ்ரேலை கடுமையாக கண்டித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல் இஸ்ரேல் அரசால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதம். அமெரிக்கா, ஐரோப்பிய சக்திகளுடன் போர் தீப்பிழம்பை இஸ்ரேல் தூண்டுகிறது என்று காட்டமாக விமர்சனம் செய்துள்ளது.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருகின்றனர். இருநாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சனை இருந்தது. இந்த பிரச்சனை தற்போது போராக வெடித்துள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. ஈரான் அணுஆயுதம் தயாரித்தால் அது இஸ்ரேலுக்கு பெரிய பிரச்சனையாக மாறும்.

ஏனென்றால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலிடம் மட்டும் தான் அணுஆயுதம் உள்ளது. இதனால் ஈரான் கைக்கு அணுஆயுதம் செல்வது அந்த பிராந்தியத்தில் இஸ்ரேலின் செல்வாக்கை குறைக்கும். இதனால் அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல், ஈரானின் அணுஆயுத தயாரிப்பை கடுமையாக எதிர்த்து வருகிறது.
இதற்கிடையே தான் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் திடீரென்று ஈரானை தாக்கியது. ஈரானின் ராணுவ தளம், அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியத்தை செறிவூட்டு மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஈரான் ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இன்று 7 வது நாளாக மோதல் நடந்து வருகிறது.
இந்த மோதலில் தற்போது வரை ஈரானில் 650க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 1000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலை எடுத்து கொண்டால் அங்கு 28 பேர் பலியாகி உள்ளனர். 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலை ஒப்பிடும்போது ஈரானுக்கு தான் சேதம் அதிகம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தான் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை வடகொரியா கண்டித்துள்ளது. இதுதொடர்பாக வடகொரியாவின் வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளதாவது: ‛‛இஸ்ரேல் - ஈரான் மோதல் கவலையளிக்கிறது. பொதுமக்களை கொல்வது மனிதகுலத்துக்கு எதிரானது. அது மன்னிக்க முடியாத குற்றம்.
அமெரிக்கா, ஐரோப்பிய சக்திகளுடன் சேர்ந்து போர் தீப்பிழம்பை தூண்டும் வகையில் இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது. ஈரான் மீதான இஸ்ரேலின் நடவடிக்கை என்பது அந்த நாட்டு அரசால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதம். இது மத்திய கிழக்கில் முழு அளவிலான போர் அபாயத்தை அதிகரிக்கும்'' என கண்டித்துள்ளது.
-
வாய்ப்பில்லை ராஜா வாய்பில்லை! ஈரானை இறங்க வைக்க முடியாது! அமெரிக்காவுக்கு சவால் விட்ட அதிபர்! -
அமெரிக்காவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை.. ஈரானுக்கு பறந்த பாகிஸ்தான் டீம்! அடுத்து என்ன நடக்கும்? -
அமெரிக்காவை எதிர்க்க தயாராகும் ஈரான்.. முக்கியமான பிளான் ரெடி! ரஷ்யா, சீனா, மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் -
டிரம்ப்: அதிபர் பதவியில் இருந்து துரத்தியடிக்கப்படுவாரா? அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடக்கும் பரபர வாக்கெடுப்பு -
முறிந்த பேச்சுவார்த்தை.. முளைக்கும் புது நம்பிக்கை! ஒரே ரூமில் அமர்ந்து பேச அமெரிக்கா- ஈரான் சம்மதம் -
கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா! -
டிரம்பிடம் பணிந்த சீனா? ஹார்முஸில் அமெரிக்க கடற்படை செய்த மெகா சம்பவம்! ஜலசந்தியில் பதற்றம்! -
"பில் கட்டக் கூட காசு இல்லையா?" கம்பி நீட்டிய பாகிஸ்தான்.. இது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா -
வரும்.. ஆனா.. வராது! ஈரான் போர் முடியுமா? முடியாதா? மிகத் தெளிவாகக் குழப்பும் டிரம்ப்! அடுத்து என்ன? -
ஆப்பு வச்சுடுச்சே அமெரிக்கா..ஈரானை வட்டமிட்ட ஸ்டீல் அரக்கன்கள்! படபடவென பறந்த எண்ணெய் ரேட்! சிக்கல்? -
"5 vs 20.." விட்டு கொடுக்காத ஈரான்.. விடாப்பிடியாக இழுக்கும் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்? -
கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை டெஸ்ட் செய்த வடகொரியா.. அமெரிக்காவுக்கு ஷாக்! மாறும் போர் களம்!












Click it and Unblock the Notifications