அடுத்தடுத்து பறந்த 2 'பாலிஸ்டிக்' ஏவுகணைகள்.. இந்த முறை நிலத்திலிருந்து அல்ல.. மாஸ் காட்டிய வடகொரியா
அமெரிக்கா, தென்கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு எதிராக வடகொரியா ஏவுகணை சோதனையை தொடங்கியுள்ளது
பியாங்யோங்: தொடர்ந்து ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வரும் வடகொரியா, தற்போது நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணை சோதனையை நடத்தியிருக்கிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
சர்வதேச அளவில் அமெரிக்காவும், தென் கொரியாவும் ஓரணியில் கைகோர்த்திருக்கும் நிலையில் இதற்கு எதிராக வடகொரியா தொடர்ந்து இயங்கி வருகிறது. குறிப்பாக கொரிய தீபகற்பத்தில் நேட்டோ படையினர் விரட்டப்பட வேண்டும் என்பதில் வடகொரியா தீவிரமாக இருக்கிறது. ஆனால் இதற்கு அமெரிக்காவும், அதன் கூட்டாளியுமான தென் கொரியாவும் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இரு நாடுகளுக்கிடையேயும் மோதல் போக்கு நீடித்த வருகிறது.

இந்நிலையில் தென்கொரியாவுடன் அமெரிக்கா மிகப்பெரிய ராணுவ பயிற்சியை தொடங்கி இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் நடைபெறும் மிகப்பெரிய கூட்டு ராணுவ பயிற்சி இதுவாகும். இந்த பயிற்சி பக்கத்திலேயே இருக்கும் வடகொரியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே வடகொரியா வழக்கம்போல தன்னுடைய ஏவுகணை பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த முறை தரையிலிருந்து அல்லாமல் நீரிலிருந்து ஏவுகணையை ஏவி மிரள செய்திருக்கிறது.
அமெரிக்காவும், தென்கொரியாவும் கடந்த 2018ம் ஆண்டு 'சுதந்திரக் கேடயம்' எனும் ஒப்பந்தத்தை போட்டது. ஒப்பந்தத்தின்படி ஆண்டுக்கு 10 நாட்கள் வரை இரு நாடுகளும் போர் பயிற்சியை மேற்கொள்ளும். இந்த பயிற்சியில் இரு நாடுகளும் பின்பற்றி வரும் போர் தந்திரங்களை பகிர்ந்து கொள்ளும். இதேபோல ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தென்கொரியாவுடன் அமெரிக்க ராணுவம் ஏதாவது ஒரு ஒப்பந்தத்தின் கீழ் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. ஒரு முறை விமான பயிற்சி என்றால் மறுபுறம் கடற்படை பயிற்சி. இப்படி தொடர் பயிற்சிகளுக்கு வடகொரியா தொடர்ந்து ஏவகணை சோதனையை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது நீர்மூழ்கி கப்பலிலிருந்து இரண்டு ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளது. இதுபோன்று நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணைகளை ஏவுவது இது முதல் முறையல்ல. கடந்த 2016ம் ஆண்டிலிருந்து இதுபோன்ற ஏவுகணைகளை வடகொரியா ஏவி வருகிறது. இந்த ஏவுகணைகள் பாலிஸ்டிக் வகையை சேர்ந்ததாகும். இது கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டதாகும். தற்போது ஏவப்பட்டுள்ள ஏவுகணையானது சுமார் 1,500 கி.மீ தூரம் வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும். 1,500 கி.மீ எனில் அமெரிக்காவின் நேச நாடான ஜப்பான் இந்த வரம்புக்குள்தான் வருகிறது.
அதேபோல அமெரிக்காவின் மிக முக்கிய ராணுவ தங்களும் இந்த எல்லைக்குள்தான் வருகிறது. இது தவிர தென்கொரிய+அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை வடகொரியா தொடர்ந்து கண்டித்து வருகிறது. ஆனால் இந்த நீர்மூழ்கி ஏவுகணை சோதனைக்கு தென்கொரியா கடும் கண்டம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் நேச நாடுகளை அச்சுறுத்தும் செயல் என்றும் குற்றம்சாட்டியுள்ளது. ஏற்கெனவே அணு ஆயதங்களை பயன்படுத்துவதாக வடகொரியா மீது புகார் இருக்கிறது. எனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சில வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications