"வெர்ஜின்" பெண்கள் மட்டும்.. வடகொரிய அதிபர் கிம்மை திருப்திப்படுத்த தனி டீம்! அதிர வைக்கும் தகவல்கள்
பியாங்யாங்: ஒவ்வொரு ஆண்டும் வடகொரிய அதிபரைத் திருப்திப்படுத்த 25 இளம்பெண்களைக் கொண்ட பிளஷர் டீம் தேர்வு செய்யப்படுமாம். அவர்கள் எப்படித் தேர்வு செய்யப்படுவார்கள், அவர்கள் வேலை என்ன என்பதை வடகொரியாவில் இருந்து தப்பி வந்த இளம்பெண் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த உலகின் மற்ற நாடுகளில் இருந்து தனித்து இருக்கும் நாடு என்றால் அது வடகொரியா.. அங்கு கிம் ஜாங் உன் அதிபராக இருக்கும் நிலையில், அவர் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார்.

இளம்பெண்: அங்குப் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதனால் அங்கு வாழ முடியாமல் சிலர் அங்கிருந்து தப்பி வெளிநாடுகளுக்குச் செல்லும் நிகழ்வுகள் அவ்வப்போது நடக்கும். அப்படி தான் வடகொரியாவில் இருந்து தப்பி வந்த யோன்மி பார்க் என்ற இளம்பெண், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் குறித்து சில பரபர தகவல்களைக் கூறியிருக்கிறார்.
அதாவது கிம் ஜாங்-உன் ஒவ்வொரு ஆண்டும் 25 வெர்ஜின் பெண்களைத் தன்னை சந்தோஷப்படுத்தும் பிளஷர் டீமிற்கு (pleasure squad) தேர்வு செய்கிறார் என்று யோன்மி பார்க் கூறியுள்ளார். தோற்றம் மற்றும் அரசியல் சார்பு ஆகியவற்றின் அடிப்படையில் அந்த பெண்கள் தேர்வு செய்யப்படுவார்களாம். கிம்மின் பிளஷர் டீமி தேர்வு முறைக்கு இரண்டு முறை சென்றுள்ளதாகத் தெரிவித்த யோன்மி, இருப்பினும் தனது குடும்பச் சூழல் காரணமாகத் தன்னை அவர்கள் தேர்வு செய்யவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
அழகான பெண்கள்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அவர்கள் பள்ளிகளுக்குக் கூட சென்று செக் செய்வார்கள். ஒவ்வொரு க்ளாஸ் ரூமிற்கும் கூட சென்று பார்ப்பார்கள். எந்தவொரு அழகான பெண்ணையும் மிஸ் செய்யக்கூடாது எனப் பல முறை ஆய்வு செய்வார்கள். எந்தவொரு அழகான பெண்ணையும் கண்டுபிடித்தவுடன் அவர்களின் குடும்பச் சூழல் மற்றும் அரசியல் நிலைப்பாட்டை ஆய்வு செய்வார்கள்.
வட கொரியாவில் இருந்து தப்பியோடிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களை விட்டுவிடுவார்கள். அதேபோல தென் கொரியா உள்ளிட்ட பிற நாடுகளில் உறவினர்களைக் கொண்டு இருந்தால் அந்த பெண்களையும் விட்டுவிடுவார்கள். மற்றவர்களை மட்டும் தேர்வு செய்வார்கள்.
கன்னிப் பெண்கள்: அவர்கள் கன்னிப் பெண்களாக என்பதை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். சோதனையின் போது, சிறிய வடு உள்ளிட்ட எதாவது சின்ன பிரச்சினை இருந்தாலும் அவர்களை நிராகரித்துவிடுவார்கள். கடுமையான சோதனைக்குப் பிறகு, வட கொரியா முழுவதிலும் இருந்து ஒரு சிலர் மட்டும் பிளஷர் டீமிற்கு தேர்வாவார்கள். அவர்கள் வடகொரிய தலைநகர் பியாங்யாங்கிற்கு அனுப்பப்படுவார்கள்.
அங்கு கிம் ஜாங் ஆசைகளைப் பூர்த்தி செய்வதே அவர்களின் ஒரே நோக்கம். இந்த டீம் மொத்தம் மூன்று தனித்தனி குழுக்களாகப் பிரிக்கப்படும்.. ஒரு டீம் மசாஜ் செய்வதற்கு என இருப்பார்கள். இன்னொரு டீம் ஆட்டம் பாட்டம் என கிம்மை மகிழ்விப்பார்கள்.. மூன்றாவது டீம் பாலியல் ரீதியாக கிம் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். அவர்களை எப்படி மகிழ்விப்பது என்பதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அதுதான் அவர்களின் ஒரே வேலை" என்றார்.
அடுத்து என்ன: மிகவும் கவர்ச்சிகரமான பெண்களை கிம் ஜாங் தேர்வு செய்து கொள்வாராம். மற்றவர்கள் இதர ஜெனரல்கள் மற்றும் அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்த நியமிக்கப்படுவார்களாம். அவர்கள் 25-26 வயதாகும் போது அவர்கள் அந்த பிளஷர் டீமில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார்களாம். அவர்களில் சிலரை கிம்மின் பாதுகாவலர்கள் திருமணம் செய்து கொள்வார்களாம்.
இந்த பிளஷர் டீம் 1970 களில் கிம் ஜாங்-உன்னின் தந்தை கிம் ஜாங்-II அதிபராக இருந்த போது முதலில் தோற்றுவிக்கப்பட்டதாக யோன்மி கூறுகிறார். பல பெண்களுடன் தொடர்ச்சியாக உடலுறவு வைத்துக் கொண்டால் மரணம் அடைய மாட்டோம் என கிம் ஜாங் தந்தை நம்பியுள்ளார். அதன் காரணமாகவே அவர் இந்த டீமை உருவாக்கி உள்ளார். இருப்பினும், கிம் ஜாங் தந்தை 70 வயதில் மாரடைப்பால் கடந்த 2011ஆம் ஆண்டில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications